ரஷ்ய புரட்சி மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்பினையும் முற்றாக மாற்றிப்போட்டன. அத்தகைய புரட்சிகளுள் ரஷ்யப்புரட்சியானது முக்கியத்துவமிக்கதோர் புரட்சியாகும். இப்புரட்சியானது ஏனைய புரட்சிகளிலிருந்து வேறுபடக் காரணம் கால்மாக்சினது பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு செயலுருக்கொடுத்த புரட்சி இது என்பதனாலாகும். புரட்சியின் பயனாக சோவியத் குடியரசுகளின் கூட்டமைப்பு தாபிக்கப்பட்டு 1991 வரை நீடித்தது.