வரலாறு - அறிமுகம்
வரலாறு என்பது சமூக மனிதனின் கடந்த காலத்தை பல்வேறு கோணங்களிலும் பகுப்பாய்வு செய்து அதன் தற்கால அபிவிருத்திகளையும் எதிர்கால நம்பிக்கைகளையும் கற்கும் பாடமாகும். இதனால் மூலாதாரங்களின் அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு கற்பது இக்கற்கையில் முக்கியம் பெறுகிறது. வரலாற்று அறிவு இல்லாது நாம் எமது சமுகம், சமயம், விழுமியங்கள், மரபுகள், அரசியல், நிர்வாகம் போன்ற பலவற்றின் பின்னணியினை சரிவர விளங்கிக் கொள்ள முடியாது.
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்
இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது ஆரம்ப கற்காலத்தையும் மத்திய கற்காலத்தையும் உள்ளடக்குகிறது. இக்காலத்திலேயே இலங்கையில் ஆரம்ப குடியேற்றங்களும் தோற்றம் பெற ஆரம்பித்தன. இங்கு ஆரம்ப கற்காலம் என்பது தாழ் ஆரம்ப கற்காலம், இடை ஆரம்ப கற்காலம், உயர் ஆரம்ப கற்காலம் என மேலும் மூன்றாக பிரித்து நோக்கப்படுகிறது.
வினாக்களுக்கான விடைகள் கிடைக்க பெறுமா
ReplyDeleteThank u so much sir niraiye vidayem ugaltta irunthu peytrukonden sir pls sml hlp sir enkku irasarattai kala nagareekam patrye notes poduga sir
ReplyDelete