Skip to main content

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.
ஆயிலும் மாட்டின் லூதருக்கு முன்பே திருச்சபையின் செயற்பாடுகள் 13ம் நூற்றாண்டிலிருந்து செயின்ட் கிரான்சியஸ்> செயின்ட் டாழினிக்> வைக்ளிப்> ஜோன் ஹஸ்> சவனரோலா போன்றோரால் எதிர்க்கப்பட்டாலும் அவை தீவிரத்தன்மை மிக்க புரட்டசியொன்றாக மாற்றமுறவில்லை. இவர்கள் சமயத்தில் திருத்தங்களை விரும்பினேரே அன்றி சமயத்திலிருந்து விலகவோ சமயத்தில் பிளவுகளை உண்டாக்கவோ விரும்பவில்லை ஆனால் மாட்டின் லூதர் அவர்களில் இருந்து வேறுபட்டிருந்தார். இதனால் அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள் கத்தோலிக்க சமயத்தில் பிளவினை ஏற்படுத்தியது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் முதலில் ஜெர்மனியில் சமய சீர்திருத்தம் தோன்றுவதற்கு இந்நாட்டினுடைய அரசியல் சமூக பொருளாதார நிலைகளே காரணமாக இருந்தது.
1. பெயரளவில் ஜெர்மனி ஒரு இராச்சியமாக இருந்த போதும் உண்மையில் அது சுயாதீனமான சமஸ்தானங்கள் பலவற்றினைக் கொண்ட ஒரு சமஸ்டி முறையாக விளங்கியமையால் அங்கு ஒரு பலமான மத்திய அரசாங்கம் ஒன்று இருக்கவில்லை இந்நிலையில் ஜெர்மனியில் ஏற்படுத்தப்பட்ட லூதரின் சீர்திருத்தங்களை ஜெர்மனியில் கட்டுப்படுத்த முடியாது போனது.
2. அக்காலத்தில் இருந்த ஐரோப்பிய அரசுகளான இங்கிலாந்து> பிரான்ஸ்> ஸ்பெயின் போன்றன மானிய முறையில் இருந்து விலகி தேசிய அரசுகளாக மாறிக் கொண்டன. ஆனால் ஜெர்மனியோ மானிய முறையினையே தொடர்ந்தும் பின்பற்றி வந்தது இந்நிலையில் அங்கு பாப்பரசரும் திருச்சயையும் காட்டிய ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக மானிய பிரபுக்கள் பலரும் லூதரின் புதிய கருத்துக்களை ஆதரித்தனர். 
3. அக்காலத்து உரேமப் பேரரசன் 5ம் சால்ஸ் ஏனைய சீர்திருத்தக்காரரின் கருத்துக்கள் போல லூதரின் கருத்துக்களும் காலத்தால் மங்கிப் போய்விடும் என எதிர்பார்த்தார். ஆனால் லூதர் ஏனைய சீர்திருத்த வாதிகளினை போலல்லாது சமயம் தொடர்பான ஆழ்ந்த அறிவும்> ஒழுக்கமும்> தனது கொள்கை மீது திடவுறுதியும் கொண்டவராக விளங்கினார். இதனாலேயே 5ம் சால்ஸ்  மன்னன் கொண்டிருந்த கருத்துக்கு மாறாக  ஜெர்மனியில் லூதரால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கமானது பல்வேறு எதிர்ப்புக்களின் மத்தியிலும் தொடர்ந்தது. 
4. பரிசுத்த ரோமப் பேரரசின் அரசனாக இருந்த மக்ஸிமிலியன் 1919 ஐனவரியில் இறந்ததைத் தொடர்ந்து ஸ்பானியாவைச் சேர்ந்தவனான 5ம் சால்ஸ் என்பவன் பேரரசனாக 1519ல் தெரிவு செய்யப்பட்ட போது அவன் லூதரின் இயக்கத்தை அடக்கிவிடுவான் என எதிர்பார்க்கப்பட்டாலும்> அவ்வரசனோ லூதரின் இயக்கத்தினை ஏனைய சீர்திருத்தக்காரர்கள் போல் குறைத்து மதிப்பிட்டதோடு மட்டுமல்லாது பிரான்ஸ் தேசத்தோடு நடத்திய நீண்ட போர்களால் ஜெர்மன் மீது முறையான கவனத்தை செலுத்த முடியவில்லை.
5. ஜெர்மனியர் லூதரின் சமய மறுமலர்ச்சி இயக்கத்தினை வெறுமனே சமய சீர்திருத்த இயக்கமாக மட்டுமன்றி அதனையொரு தேசிய இயக்கமாகவும் பார்க்க முட்பட்டனர். இதனால் ஸ்பெயினைச் சேர்த்த உரோம இராச்சிய அரசன் தம்மைப் கட்டுப்படுத்துவதையும்> அவர்களுக்கு இங்கிருந்து வரி செலுத்தப்படுவதையும் ஆட்சியாளர்களும் மக்களும் விரும்பவில்லை. அதனால் அத்தகைய ஆட்சி முறையில் இருந்து விடுபடுவதற்காகவும் லூதரின் இயக்கமானது ஜெர்மனிய சிற்றறசர்களின் ஆதரவைப் பெற்றதுடன் ஜெர்மனியராலும் ஆதரிக்கப்பட்டது.
6. இது தவிர டெட்செல் என்பவர் ஜெர்மனியில் பாவ மன்னிப்பு பத்திரத்தினை விற்பதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளும் அங்கு சமய சீர்திருத்த இயக்கம் தோன்றக் காரணமானது.

3.1. சமய சீர்திருத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

3.1.1. சமயக் காரணம்

1. மத்திய காலத்தில் பாப்பரசர்> கர்தினால்மார்கள்> பிஷப்> பாதிரியார்கள் போன்றோரைக் கொண்டு ஒழுங்கமைந்திருந்த திருச்சபை தாபனமானது ஒவ்வொரு கிறிஸ்தவர் வாழ்விலும் முக்கிய பங்கினை வகித்தது. அவர்கள் ஆன்மீக வாழ்வுக்கு துணைநின்ற திருச்சபை காலப்போக்கில் தம்மை சொத்துக்கள் நிறைந்த மானியமுறை நிறுவனமாக மாற்றிக் கொண்டதால் தாம் பெற்றிருந்த செல்வாக்கினை உலகியல் அதிகாரத்தினை பெறுவதற்காக பயன்படுத்தத் தொடங்கினர். குறிப்பாக 6ம் அலெக்சாந்தர் எனும் பாப்பரசர் உலக நாடுகளை ஸ்பெயின்> போத்து;கல் நாடுகளிடையே இரண்டாக பிரி;த்தளித்தார். பாப்பரசர் 2ம் ஜூலியஸ் ஐரோப்பிய அரசியலில் அதிக தலையீடுகளை மேற்கொள்ளத்தொடங்கினார்.
2. திருச்சபையின் நியமனங்கள் அதிக பணம் உள்ளவர்களுக்கு விற்கப்பட்டது. இவ்வாறு நியமிக்கப்பட்ட சில மத குருமார் சமயம் பற்றி சரியான அறிவு இல்லாதவர்களாக இருந்தனர். பணத்துக்கு பதவிகளை வாங்கியவர்கள் தமது பணிகளுக்காக மிகமிக அதிக கட்டணங்களை கத்தோலிக்கர் மீது திணித்தணர்.
3. திருச்சபையினரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையும் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. மறுமலர்;ச்சிக் காலத்தில் வளர்ச்சியுற்ற முதலாளித்துவம் சில குருமாரையும் பாப்பரசரையும் செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றியதால் ஊழல்கள் மூலம் ஏராளமான சொத்துக்களை குவிப்பதற்கு உதவியது. இதனால் இவர்கள் இளவரசர்களைப்போல் உலகியல் விடயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக மாறினர். மேலும் சில பாப்பரசர்கள் துறவரத்தை விட்டு குடும்ப வாழ்க்கையினையும் நடத்தி வந்தனர். இதனை இராஸ்மஸ் என்பவர் ஆத்ம ஞானத்தை புறக்கணித்துவிட்;டு போப் சீசரைப் போல் இராணுவ ஊர்வலத்திற்கு தலமை தாங்கியதாக குற்றம் சாட்டினார். மார்டின் லூதர் விட்டன்பேர்க் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக பதவிவகித்த காலத்தில் ரோமுக்கு சென்றபோது (1211) பாப்பரசரதும் ஏனைய குருமாரினதும் உலகியல் வாழ்க்கையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
4. திருச்சபையின் ஊழல் நடவடிக்கை. திருச்சபையானது திருமணம் போன்றவற்றில் காணப்பட்ட கடுமையான விதிகளை விலக்கிக் கொண்டு செல்வமும் செல்வாக்குமிக்க தனிப்பட்டவர்களிடம் இருந்து பெருந்தொகை பணத்தை பெற்றுக் கொண்டது. இக்காலத்தில் திருச்சபை அறவிட்டு வந்த வரியும் மக்களினால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. மத்திய காலத்தில் திருச்சபையானது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் பீற்றர் பென்ஸ் எனும் வரியினையும் குடும்ப வருமானத்தில் 1/10 பங்கு டயித் எனும் வரியினையும் அறவிட்டது. இத்தகைய ஊழல் நடவடிக்கைகளால் திருச்சபையின் சொத்துக்கள் அதிகரித்துக் கொண்டது.
5. திருச்சபையின் கோட்பாடுகளை எதிர்த்த மாற்று கோட்பாட்டாளர்கள் மத விரோதம் எனக் கூறப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படும் நிலை திருச்சபைமீது மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. 1415ம் ஆண்டு ஜோன் ஹஸ் எனும் சீர்திருத்தவாதி எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டதுடன்> 1498ல் 6ம் அலெக்சாந்தரின் ஒழுக்கம் பற்றி பேசிய சவனரோலா எனும் கிறிஸ்தவ துறவி கழுவேற்றப்பட்;டு கொல்லப்பட்டார்.
6. அத்துடன் ஒரே நேரத்தில் பல்வேறு பாப்பரசர்கள் செயற்றட்டமை பாப்பரசர்கள்> திருச்சபை மீது இருந்த நன்மதிப்பை குறைத்தது. 1305ல் பாப்பரசராக பிரான்சியரான 6ம் கிளமென்ற் பாப்பரசரின் மத்திய நிலையமான ரோமுக்கு செல்லாது றோன் நதிக்கரையிலுள்ள அவிஞ்சோன் நகரில் தங்கினார். அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பிரான்ஸை சேர்ந்த பாப்பரசர்களும் பிரான்சிலேயே வாழ்ந்தனர். இதனால் 1309-1377 வரையான காலம் பாபிலோனிய சிறைவாசம் எனப்பட்டது. 
இதன் பின்னர் 1377ல் பாப்பரசரான 2ம் கிரஹரி உரேமில் சென்று தங்கினார். அவரின் பின் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட உர்பன் ஏனும் ஆயரை ஏற்றுக் கொள்ளாத பிரான்சிய கர்தினால்கள் 13ம் கிளமென்டை பாப்பரசராக்கினர். இதன்பின் திருச்சபையை பாதுகாக்கும் நோக்குடன் அறிஞர்கள் பலர் ஒன்றுகூடி 5ம் அலெக்ஸான்டரை பாப்பரசராக்கினர். இச்சிக்கலை தீர்க்;க உரோமப் பேரரசின் தலையீட்டால் வேறோரு பாப்பரசர் நியமிக்கப்பட்டார். மேற்படியான காரணங்களால் கத்தோலிக்க மக்கள் மத்தியில் பாப்பரசர்கள், திருச்சபை மீது இருந்த நன்மதிப்பு குறைந்தது.
7. திருச்சபைக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு உடனடிக் காரணம் பாப்பரசரால் பாவமன்னிப்பு பத்திரங்களை ஜெர்மனியில் விற்பனை செய்வதற்காக ஜோன் டெட்செல் என்பவர் நியமிக்கப்பட்டமையாகும். கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்த வரையில் பாவ மன்னிப்பு என்பது ஒருவர் தான் செய்த தவறுக்கு மனம்வருந்தி திருந்துவாரேயானால் அவருக்கு மன்னிப்பு வழங்குவதைக் குறிப்பதாகும். ஆனால் இப்பாவமன்னிப்பினை பணத்தை திரட்டுவதற்காக திருச்சபை பணத்திற்கு விற்பதனை மாட்டின் லூதர் எதிர்த்தார். இதுவே திருச்சபைக்கு எதிர்க கிளர்ச்சிகளுக்கு உடனடிக் காரணமாகவும் விளங்கியது.

3.1.2. பொருளாதாரக் காரணங்கள்

1. திருச்சபைக்கு செலுத்த வேண்டிய வரி தொடர்பாக மக்கள் அதிருப்பியுற்றமை. ஐரோப்பாவெங்கும் திருச்சபையினால் பெருந்தொகையான வரி வசூலிக்கப்பட்டதுடன் அவை கத்தோலிக்க தலைமைபீடமாகவிருந்த உரோமிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அக்காலத்தில் மக்கள் இங்கிலாந்து> நெதர்லாந்து> ஜெர்மனி போன்ற நாடுகள் குரலெழுப்பியதுடன். கிறிஸ்தவ மக்கள் அவ்வரிகள் தொடர்பாக அதிர்ப்தியுற்றிருந்தனர்.
2. ஆன்மீக நிறுவனமான திருச்சபையானது பல்வேறு வழிகளிழலும் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை சேர்த்துக் கொன்டு மாநியமுறை நிறுவனமாக மாறியமையினால். அதனிடம் சேர்ந்த சொத்துக்களை தமதாக்கிக் கொள்வதற்கு விரும்பிய நிலப்பிரபுக்கள் திருச்சபைக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு ஆதரவு வழங்கினர்.
3. திருச்சபை நிலங்களுக்கு அரசர்களின் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதனையும் அரசர்கள் பலர் விரும்பவில்லை

3.1.3. அரசியல் காரணங்கள்

1. ஜெர்மனிய சிற்றறசர்களின் ஆதரவு. பாப்பரசர்கள் தாம் கடவுளின் பிரதிநிதி எனக்கூறியதுடன் திருச்சபையானது அரசர்கள் மீது தம் மேலாதிக்கத்தை செலுத்தி வந்தது. திருச்சபை தனியான சட்டங்களையும் நீதிமன்றங்களையும் உருவாக்கி அரசாங்கம் போல் செயற்பட்டதுடன் சிலவேளைகளில் மன்னனது தீர்ப்புக்களும் மேன்முறையீடு செய்யப்பட்டு திருச்சபையினால் மாற்றப்பட்டன. இதனை அரசர்கள் விரும்பவில்லை. இதனால் மத்திய காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருச்சபைக்கும் அரசர்களுக்கும் இடையில் அதிகாரம் தொடர்பில் மோதல்கள் ஏற்படும் நிலை உண்டானது. எனவே புரட்டஸ்தாத்து சமயக்கருத்துக்களை ஆதரிப்பதன் மூலம் பாப்பரசரின் ஆதிக்கத்தை நீக்கிக் கொள்ள பல்வேறு நாட்டரசர்களும் வழிகளைத் தேடினர்.
2. திருச்சபைகளுக்குரிய நிலங்களில் இருந்து மன்னர்களால் வரியினை அறவிடமுடியாது போனதுடன் மன்னரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் திருச்சபை வரியினை அறவிட்டமையினால் அரசர்கள் தமக்கு வேண்டிய வரிகளை பெறுவதில் சிக்கல்களை எதிர்கோள்ள வேண்டியிருந்தது.
3. தேசிய உணர்வின் விருத்தியினால் தேசிய அரசு எனும் என்னக்கரு வளர்ச்சி பெற்றமையால் தமது இராச்சிய உள்விவகாரங்களில் பாப்பரசர்கள் தலையிடுவதை அரசர்கள் விரும்பவில்லை;. இங்கிலாந்து மன்னனான எட்டாம் ஹென்றி தனது திருமண விடயமாக தீர்மானம் செய்வதில் பாப்பரசர் தடையாக இருப்பதை அறிந்தமையினால் இந்கிலாந்து திருச்சபையை உரோம திருச்சபையிலிருந்து தனியாக பிரிந்து இயங்கச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

3.1.4. அறிவுக் காரணங்கள்.

1. மறுமலர்ச்சியினால் இலத்தின் மொழியில் எழுதப்பட்ட பைபில் ஏனைய ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டது. ஜோன் வைக்ளிப் என்பவர் ஆங்கிலத்திலும்> மாட்டின் லூதர் ஜெர்மனியிலும் திருவிவிலியத்தை மொழிபெயர்ப்புச் செய்தனர். இவை பைபிளில் கூறப்பட்ட விடயங்கள் பற்றி மக்கள் தமது சொந்த மொழியில் அறியவும். திருச்சபையின் அதிகாரத்தைப் பற்றியும் இதன் போதனைகள் பற்றி ஆராயவும் வழி ஏற்பட்டது.
2. இக்காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் பலனாக அச்சு இயங்திரமானது கண்டுபிடிக்கப்பட்டமையினால் பல்வேறு சமயக் கருத்துக்களும் வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டதெனலாம். மாட்டின் லூதர் சமய சீர்திருத்தம் தொடர்பில் வெளியிட்ட பிரசுரங்கள் காட்டுத் தீபோல ஜெர்மனியின் எல்லா பிரதேசங்களிலும் பரவிக் கொள்வதற்கு அச்சியந்திரமே காரணம் எனலாம்.
3. மறுமலர்;சியினால் ஏற்பட்ட அறிவு விருத்தியின் பலனாக தேற்றம் பெற்ற மானிடவாத சிந்தனையும் அதனால் தோன்றிய சுதந்திர சிந்தனைகளின் விருத்தியும் திருச்சபையின் கருத்துக்கள் சிலவற்றினை கேள்விக்கு உள்ளாக்கியது. குறிப்பாக இராஸ்மஸ் என்பவர் திருச்சபை தொடர்பானவும் அதனது மூடப்பழக்கங்கள் தொடர்பாகவும் தன்னுடைய 'முட்டாள்களின் கப்பல்' என்ற நூலில் எள்ளி நகையாடினார்.

3.2 சமய சீர்திருத்தம் ஏற்படல்.

கத்தோலிக்க திருச்சபையானது மத்திய காலத்திலிருந்து உலகியல் நாட்டம் கொண்டு சொத்துக்களையும்> ஏராளமான செல்வங்களையும் சேர்த்த மானிய முறை நிறுவனமாக மாற்றமுற்று வந்த போது 13ம் நூற்றாற்றடில் இருந்து அதனது செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புக்கள் ஐரோப்பாவில் தோன்றினாலும் அவை எவையும் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயம்> அதன் வழிபாடுகள் போன்ற எவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஆயினும் 16ம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக மார்ட்டின் லூதர்(1483 -1546) ஏற்படுத்திய கிளர்ச்சியானது ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தின.
16ம் நூற்றண்டில் எழுச்சி பெற்ற சமய சீர்திருத்த இயக்கத்தினை முன்னின்று நடத்தியவர் ஜெர்மனியைச் சேர்ந்த மாட்டின் லூதராவார். இவர் 1483 நவம்பர் 10 திகதி விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது பெற்றோர் மாட்டின் லூதரை ஒரு சட்டத்தரனியாக்கவே விரும்பினர். அதனால் லூதர் ஏர்பேட் பல்கலைக்கலகத்தில் சட்டக் கல்வியினைப் பயின்றார். 1505ல் ஓர்நாள் இடி மின்னலில் அகப்பட்டு பெரும் பயமுற்றபோது தான் ஒரு துறவியாக வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொண்டார். மத்திய காலத்தில் மக்களிடையே காணப்பட்ட 'தான் பாவி தனக்கு இரட்சிப்புக் கிடைக்க வேண்டும்.' மன நிலையே இதற்குக் காரணமானது.
இதன்படி லூதர் கிறிஸ்தவ மடத்தில் சேர்ந்து தனக்குரிய கடமைகளை உரிய முறையில் செய்து வந்ததுடன் 1507ல் குருப்பட்டத்தையும் பெற்றார். பின் லூதர் 1512ல்  வேதாகமத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து சாக்சனியைச் சேர்ந்த பிரடெரிக் அரசனால் தாபிக்கப்பட்ட விட்டன்பேர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்படடடதுடன் இக்கால  பேராசிரியர்களுள் தலைசிறந்து விளங்கினார். இதற்கிடையில் 1510ல் உரோமுக்குச் சென்றிருந்த லூதர் உரோமானிய குருமார் அங்கு நடத்திவந்த உலகியல் வாழ்க்ககையினைக் கண்டு அதிர்ச்சியுற்றார். 
இந்நிலையிலேயே 1517ஆம் ஆண்டு ரோமில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தை புதுப்பிக்க பணம் திரட்டும் நோக்கத்துடன் டொமினிக்கன் பாதிரியாரான ஜேன் டெட்செல் என்பவவர் பாப்பரசர் ஓம் லியோவினால் ஜெர்மனுக்கு பாவமன்னிப்புப் பத்திரங்களை விற்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டார். பாவமன்னிப்பு எனும் விடயம் கிறிஸ்தவ சமயத்தில் உள்ளதொரு விடயம் எனினும் அதனை பணத்திற்கு விற்பது இழிவான வியாபார தந்திரம் என்பதனை லூதர் உணர்ந்து கொண்டதுடன் அந்நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்தார். அதுவே சமய சீர்திருத்தத்தினுடைய ஆரம்பமாகவும் இருந்தது. 
இதனைத் தொடர்ந்து பாவ மன்னிப்புக்கு எதிரான 95 வாதங்களை எழுதி அதனை சாக்சனியில் உள்ள விட்டன்பேர்க் தேவாலயக்கதவில் 1917 ஒக்டோபர் 13ம் திகதி லூதர் ஒட்டினார். லூதரின் 95 வாதங்களும் இலத்தின் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு பிரதிகள் எடுக்கப்பட்டு ஜேர்மன் எங்கும் பரப்பப்பட்டதுடன் அவை மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கத்தொடங்கியது.
லூதர் சமய விடயத்தில் ஏனைய சீர்திருத்தக்காரர்கள் போல் காலப்போக்கில் திருச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார் என எதிர்பார்த்தாலும் அவர் தனது திடமான செயற்பாடுகளால் தொடர்ந்தும் பாப்பரசரினதும் திருச்சபையினதும் அதிகாரத்தை கண்டித்ததுடன் அவர்களின் செயற்பாடுகளை விமர்சித்தும் வந்தார். லூதரின் செயற்பாடுகளால் அதிர்ச்சியுற்ற பாப்பரசர் பத்தாம் லியோ 1521ல் லூதரை மதவிலக்கம் செய்யும் ஆணையினை வெளியிட்டார். ஆனால் இவ்வாணையையும் மத்திய காலத்தில் திருச்சபை தனக்கென வகுத்துக் கொண்ட ஆகமச் சட்டங்களையும் லூதர் பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் தீயிலிட்டார்.
லூதரின் திருச்சபைக்கு எதிரான  நடவடிக்கைகளுக்காக புனித உரோமப் பேரரசன் 5ம் சார்ல்ஸ் அவரைத் தண்டிக்க வேண்டும் என பாப்பாண்டவர் மன்னனை வேண்டிக் கொண்டார். ஆயிலும் லூதர் பெரும்பாலான ஜெர்மனிய சிற்றரசர்களினதும்> மக்களினதும் ஆதரவை பெற்றிருந்ததால் மன்னர் அவரை வோர்ம் நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மன்றத்திற்கு (டயட்) அழைத்து 1521 ஏப்ரல் 17ம் திகதி பகிரங்கமாக விசாரித்தார். அங்கு தான் கூறிய கருத்துக்கள் தவறென்று ஏற்குமாறு லூதர் கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் லூதர் அதனை மறுத்துவிட அவையில் லூதர் குற்றவாளி என முடிவு எடுக்கப்பட்டது. 
ஆயினும் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே சாக்சனிய சிற்றரசன் பிரடெரிக் அவரை அழைத்துச் சென்று வாட்பேர்க் கோட்டையில் வைத்து பாதுகாப்பளித்தான். அங்கிருந்த போது கிரேக்க மொழியிலிருந்த மூல நூலான புதிய ஏற்பாட்டை ஜெர்மனிய மொழியில் மொழி பெயர்த்ததோடு> 1529 இல் தனது புகழ் பெற்ற நூலான 'சிறு வினாவிடை' எனும் நூலை பதிப்பித்தார். 
1526ல் ஸ்பியர்ஸ் எனுமிடத்தில் டயட் கூடியபோது இங்கிருந்த சிற்றரசர்கள் சமயம் குறித்த பிரச்சினையை மீண்டும் எழுப்பினர். சிற்றரசர்கள் விரும்பும் சமயத்தை பின்பற்றலாம் என டயட் தீர்ப்பளித்த போதும் 1529ல் போரரசர் சார்ல்ஸ் அவ்வனுமதியை ரத்துச் செய்தார். இதனை ஜெர்மனிய எதிர்த்ததால் அவர்கள் எதிர்ப்பாளர்கள்(புரட்டஸ்தாந்தியர்கள்) எனப்பட்டனர். 
இவ்விரு பிரிவினருக்கும் மத ரீதியாக ஏற்பட்ட பிணக்குக்கு தீர்வு காண பேரரசரால் ஒக்ஸ்பேர்க்கில் 1555ல் ஓர் மாநாடு கூட்டப்பட்டது. இச் சபையானது சிற்றரசர்கள் கத்தோலிக்க மதத்தையோ> புரட்டஸ்தாந்து மதத்தையோ பின்பற்றுவதற்கு அனுமதியளித்தது. இதுவே பேரரசரால் புரட்டஸ்தாந்து மதத்துக்கு வழங்கப்பட்ட உத்தியோக பூர்வ உரிமையாகும். 

3.3 ஏனைய நாடுகளில் சீர்திருத்தத்தின் பரவல்

இதே வேளை ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளான இத்தாலி> ஸ்பெயின்> பிரான்ஸ்> டென்மார்க்> சுவீடன் போன்ற நாடுகளிலும் புரட்டஸ்தாந்து இயக்கம் பரவத் தொடங்கியதுடன் கத்தோலிக்க சமயமானது சீர்திருத்தங்களுக்குள்ளானது. இத்தாலி> ஸ்பெயின் போன்ற நாடுகளில் இச்சமயம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டாலும் ஏனைய நாடுகளில் கூடியளவு தாக்கம் செலுத்துவதாக இருந்தது.

3.3.1 சுவீடன்

சுவீடன் சுதந்திரப் போரானது அங்கு சமய சீர்திருத்தம் ஏற்படுவதற்கு காரணமாயிற்று. மத்திய காலத்தில் ஸ்கண்டினேவிய நாடுகளான சுவீடன்> டென்மார்க்> நோர்வே போன்ற நாடுகள் கல்மார் ஐக்கியம் என்ற உடன்படிக்கை (1397) மூலமாக ஒன்றினைந்திருந்தன. இக்காலத்தில் தலைநகர் கொப்பன்கேகனில் இருந்து அரசாங்கம் செயற்பட்டதால் அது டேனியச் சார்புடையதாக இருந்தது. இதனால் சுவீடன் மக்கள் குஸ்டோபஸ் வாஸா என்பவர் தலைமையில் புரட்சி செய்து(1521) குஸ்டோபஸ் வாஸா என்பவரை அரசனாக்கினர். இதனால் சுவீடன் சுதந்திர நாடானது.
சுவீடனின் சுதந்திரப் போர் போல்டிக் நாடுகளில் ஏற்படுத்திய குழப்பநிலைகளின் மத்தியில் அங்கு புரட்டஸ்தாந்து சமயம் பரவிக் கொண்டது. இக்காலத்தில் ஜேர்மனிய விட்டன்பேர்க்கில் கல்விகற்று நாடுதிரும்பிய சுவீடனைச் சேர்ந்தோர் அங்கு லூதரின் போதனைகளை பரப்பத் தொடங்கினர். இவர்களது போதனைகளால் சுவீடிய பிரபுக்களும்> அரச குடும்பத்தைச் சேர்ந்தோரும் புதிய மதத்தை தழுவினர். இவர்களுள் சிலர் மனப்பூர்வமாக மதத்தை தழுவினர்> ஆனால் சில பிரபுக்கள் திருச்சபையின் சொத்துக்களுக்காக மதத்தை தழுவினர். 1527களில் இருந்து லூதரின் சமயமே சுவீடனின் அரச மதமானது.  

3.3.2. சுவிஸ்லாந்து.

சுவிஸ் மத்திய காலத்தில் ஜேர்மனியின் பகுதியாகவே இருந்தது. 1273 ஹஸ்பேர்க் பிரபுவின் காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களை அடிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது 1291ல் ஊரி> உன்டர்> வால்டன் ஆகிய மூன்று சுவிஸ் மாவட்டங்களின் பிரதிநிதிகள் இராணுவ பாதுகாப்பு சபை ஒன்றினை உருவாக்கி போராடி ஈட்டிய வெற்றியால் 1499ல் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி ஹஸ்பேர்க் வம்சத்துக்கு சுவிஸ்லாந்தில் எவ்வுரிமையும் இல்லாது போனதுடன் சுவிஸ் 1499ல் சுதந்திரமடைந்தது.
சுவிஸ்லாந்தில் சமய சீர்திருத்தத்தை ஆரம்பித்தவர் உல்றிச் சுவிங்லி எனும் சுவிஸ்லாந்து நாட்டவராவார். வியன்னா> பேசில் போன்ற பல்கலைக் கழகங்களில் தான் பெற்ற மனிதாயக் கல்வி> சுவிஸ்லாந்தில் ஏற்பட்ட ஜனநாயக கருத்துக்கள் போன்றன இவரது சமய சீர்திருத்தக் கொள்கைகளில் வெளிப்பட்டன. 1519ல் இருந்து நேரடியான சமயசீர்திருத்தத்தில் ஈடுபடத் தொடங்கிய சுவிங்லி உரோமுடனான திருச்சபை தொடர்புளை நீக்கினார்> திருச்சபையின் நிர்வாகம் தொடர்பில் புதிய ஜனநாயக முறை ஒன்றினை ஏற்படுத்தினார். பாவ மன்னிப்பை லூதரைப்போலவே கண்டணம் செய்தார். ஆனால் சுவிங்லி தான் லூதரைப் பின்பற்றவில்லை எனவும் கூறிக் கொண்டார். இதற்கேற்றாற்போல் சில விடயங்களில் லூதரில் இருந்து மாறுபட்டுக் காணப்பட்டார்.


3.3.3. பிரான்ஸ்

பிரான்ஸில் ஏற்பட்ட கத்தோலிக்க சமய சீர்திருத்தத்திற்கு ஜோன் கல்வின் தலைமைதாங்கினார். கத்தோலிக்க சமயத்துக்கு எதிராக செயற்பட்டவர்களை கழுவேற்றிக் கொன்றதால் ஜோன் கல்வின் 1534ல் தலைமறைவாகி பேசில் நகரில் தங்கினார். இங்கு தமது பிரசித்தி பெற்ற நூலான கிறிஸ்தவ சமய சாசனம் எனும் நூலை வெளியிட்டார். இதன்பின் 1536ல் ஜெனிவா சென்று தங்கினார். இறைவன் அருளாலே மனித வாழ்வுக்கு மேன்மை கிடைக்கும், கடவுளே இறுதி முடிவெடுப்பார் போன்ற கருத்துக்களை கல்வின் வலியுறுத்தினார்.இவரது சமயப்பிரிவு 'கல்வீனியம்' எனப்பட்டது. 

3.3.4. இங்கிலாந்து.

ஆரம்பத்தில் லூதரை எதிர்த்த 8;ஹென்றி பாப்பரசரால் 10ம் லியோவால் 'சமயக் காவலர்' எனப்போற்றப்பட்டார். ஆயினும் தனது அரசியை விவாகரத்து செய்துவிட்டு ஆன்பொலின் என்பவளை திருமணம் செய்வது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டால் மன்னரே இங்கிலாந்து திருச்சபைக்கு தலைமைவகித்தார். பாப்பரசரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய இந்த திருச்சபை ஆங்கிலின்கன் திருச்சபை எனப்பட்டது. ஆயினும் 8ம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 6ம் எட்வேர்டின் ஆட்சிக் காலத்திலேயே (1547 – 1553) ஆங்கிலிக்கன் திருச்சபை புரட்டஸ்தாந்து சமயமாக பின்பற்றத் தொடங்கியது.   

3.4 விளைவுகள்

1. திருச்சபையின் ஆன்மீக அந்தஸ்த்து வீழ்ச்சியடைந்தமை. அதுவரை காலமும் ஐரோப்பாவில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் மத்தியில் திருச்சபையே ஆதிக்கம் செலுத்திவரும் நிலை காணப்பட்டது. ஆனால் மத்தியகாலத்தில் திருச்சபையின் ஊழல் மிக்க செயற்பாடுகளால் அதனிடத்தில் ஏற்பட்ட உலகியல் ஈடுபாட்டின் காரணமாக ஐரோப்பாவில் திருச்சபையானது பெற்றிருந்த முக்கியத்துவமானது படிப்படியாக சமய சீர்திருத்தக் காலத்தில் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 
2. பாப்பரசர்களின் பலம் குறைவடைந்தமை. பாப்பரசர்களின் செயற்பாடுகளே சமயசீர்திருத்தக் காலத்தில் விமர்சிக்கப்படும் ஓர் நிலை உண்டானமையினாலும்> பாப்பரசர்கள் கொண்டிருந்த அரசியல் அதிகாரம் நீக்கப்பட்டு ஆன்மீக விடயங்கள் மட்டுமே பாப்பரசர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாலும் பாப்ரசர்கள் மத்தியகாலத்தில் அரசியல்> சமய துறைகளில் செலுத்திவந்த அதிகாரம் குறைவடையும் நிலை ஏற்பட்டது. 
3. சமயத் தலைமைத்துவம் அரசியல் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது. ஐரோப்பாவின் பல்வேறு தேசிய அரசுகள் தனியான பிரதேசத்தையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தாலும் உரோமிலுள்ள சமயத் தலைமையான பாப்பரசருக்கு கட்டுப்படும் நிலையே சமய சீர்திருத்தக் காலத்திற்கு முன் வரையில் காணப்பட்டது. ஆனால் சமய சீர்திருத்தம் ஏற்பட்ட போது தேசிய அரசுகள் திருச்சபையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதுடன் அரசரின் அதிகாரத்தின் கீழ் செயற்படக் கூடிய திருச்சபைகளை தமது நாடுகளில் உருவாக்கின. பிரித்தானியா 8ம் ஹென்றி அரசன் காலத்தில் செயற்பட்ட விதம் இதற்குச் சான்றாகும்.
4. தேசிய அரசுகளின் பலம் அதிகரித்தது. ஒருபுறம் பாப்பரசரின் அரசியல் ரீதியான ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தமையானது மறுபுறம் தேசிய அரசுகனின் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தியது. இக்காலத்தில் இங்கிலாந்து> பிரான்ஸ் போன்ற நாடுகள் இவ்வாறு தமது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டன.
5. ஐரோப்பாவில் பல்வேறு மதக்கருதத்துக்கள் தோற்றம் பெற்றன. புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவில் பல்வேறு மதக்கருதத்துக்கள் தோற்றம் பெற்றன. கத்தோலிக்கம்> லூதரிஸம்> சுவிங்லிஸம்> கல்வீனிசம்> இங்கிலாந்தின் அங்கிளிக்கன் திருச்சபை போன்றன முக்கியமானவையாகும். இவ்வாறு பல்வேறு மதப்பிரிவுகள் தோன்றியமையால் ஐரோப்பாவும் சமயரீதியாக கத்தோலிக்க நாடுகள்> புரட்டஸ்தாந்து நாடுகள் என இரு அணிகளாக பிளவுற்றது. இதனால் இவ்விரு பிரிவு நாடுகளுக்குமிடையில் இடையே 1648 வரையில் சமயச் சண்டைகள் ஏற்பட்டன. 
6. திருச்சபையின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மத்தியகாலத்தில் திருச்சபையானது தன்னை ஒரு மானியமுறைத் தாபனமாக மாற்றிக் கொண்டதால் அதனது சொத்துக்கள் அதிகரித்தன. சமய சீர்திருத்தம் ஏற்பட்டதன் பின்னர் ஜேர்மனியில் புதிய மதத்தை பின்பற்றிய சிற்றரசர்கள் திருச்சபையினதும் மடங்களின் சொத்துக்களையும் கைப்பற்றிக் கொண்டனர். இதற்காகவே சில ஜெர்மனிய சிற்றரசர்கள் மதம் மாறியதுடன் இதனால் தமது சொத்துக்களை பெருக்கிக் கொள்ள முடிந்தது. புரட்டஸ்தாந்து மதம் பரவிய சுவீடன் போன்ற நாடுகளிலும் திருச்சபையின் சொத்துக்களை பெறும் நோக்குடன் சில பிரபுக்கள் மதம் மாறும் நிலையும் காணப்பட்டது.
7. லூதர் ஏற்படுத்திய பல்வேறு மாற்றங்கள் புரட்டஸ்தாந்து மதத்தின் புதிய கொள்கைகளாக பரவத் தொடங்கியதுடன், புதிய வழிபாட்டு முறையும் தோற்றம் பெற்றது. இதனால் பாதிரிமார்களும்;, கன்னியாஸ்திரிகளும் சாதாரன குடிமக்கள் போல் திருமணம் செய்து கொண்டனர். உருவவழிபாடு ஒதுக்கப்பட்டு பிரார்த்தனை தர்ம போதனை என்பன முக்கியம் பெற்றது, கடவுளுடன் மனிதர்கள் தொடர்பை ஏற்படுத்த பாதிரிமார் தேவையில்லை எனும் நிலை ஏற்படுத்தப்பட்டதால் அவர்கள் சமயத்தில் பெற்றிருந்த நிலையும் தாழ்த்தப்பட்டது.
8. ஒக்பேர்க் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. லூதரது சமய சீர்திருத்த இயக்கம் பலம் பெற்ற போது அவர்களை சமாளிப்பதற்காக லூதரபை; பின்பற்றியோருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே ஒக்ஸ்பேர்க் எனுமிடத்தில் 1555ல் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதனால் புரட்டஸ்தாந்து மதம் ஜேர்மனில் சட்டபூர்வ மதமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆயினும் இவ் ஒப்பந்தமே ஏனைய சமயபிரிவுகளுக்கு இடம்தர முடியாத நிலையினை ஏற்படுத்தியதால் முப்பதாண்டுப் போருக்கும் காரணமாகியது. 
9. எதிர் சமய சீர்திருத்தங்கள் ஏற்படத் தொடங்கின. புரட்டஸ்தாந்து மதம் பரவத் தொடங்கியதால் கத்தோலிக்க சமயத்தை பாதுகாத்து அதனை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் எதிர் சமய சீர்திருத்தங்கள் ஏற்படத் தொடங்கின. இதற்காக பல்வேறு சங்கங்கள் மிசனரிகளை உருவாக்கி கத்தோலிக்க சமயத்தை போதித்து அதனை முன்னைய நிலைக்கு மீட்டெடுக்க முயற்சித்தன. யேசு சங்கம்> பிரான்சிஸ்கன்> ஒகஸ்டியன்> டொமினிக்கன் சங்கம் போன்றன இத்தகைய சில கத்தோலிக்க சமயம் சார்பாக செயற்பட்ட சங்கங்களாகும்.
10. காலனித்துவம் வளர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டது. ஐரோப்பாவில் ஏற்பட்ட கத்தோலிக்க சமய சீர்திருத்தத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தத்தம் சமயங்களை ஏனைய ஆசிய> ஆபிரிக்க நாடுகளிலும் பரப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது காலனித்துவமும் வளர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டுக் கொண்டது. போத்துக்கல்> ஸ்பெயின் போன்ற நாடுகள் கத்தோலிக்க மதத்தை பரப்பும் நோக்கோடும் ஒல்லாந்து புரட்டஸ்தாந்து மதத்தை பரப்பும் நோக்கோடும் புதிய காலணிகளைத் தேடின.     

3.5 எதிர் சமய சீர்திருத்தம்.

புரட்டஸ்தாந்து சீர்திருத்த இயக்கமானது ஜெர்மனியில் ஆரம்பித்து பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால் ஜெர்மனியின் முக்கால் பகுதியும்> பிரான்சின் சில பகுதிகளும்> இங்கிலாந்து> ஒல்லாந்து> டென்மார்க்> நோர்வே> சுவீடன் போன்ற நாடுகளிலும் புரட்டஸ்தாந்து சமயம் பரவத்தொடங்கியது. அதனால் கத்தோலிக்;க சமயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் இருந்து அதனை மீட்பதற்கும் கத்தோலிக்க சமயத்தை மீட்டெடுத்து அதனைப் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கும் பாப்பரசரும் திருச்சபையும் முயற்சிகளை ஆரம்பித்தன இதுவே எதிர் சமய சீர்திருத்தம் என அழைக்கப்படுகின்றது. 
இதற்கமைய கத்தோலிக்க சமயத்தை மீண்டும் பரப்புவதற்காக ஒரு சங்கம் தாபிக்கப்பட்டது. இவ் எதிர்ப்புரட்சிக்கு ஸ்பானிய தேசமே மையமாக விளங்கியது. இங்கு ஸ்பானிய படையில் பல்வேறு போர்களில் பங்குபற்றி பம்பெலுனா சண்டையில் காயமடைந்து தனது கால்களை இழந்து அமைதியான வாழ்க்கை நடத்திவந்த டொன் இனிக்கோ லோபெஸ் டி றிகால்டி எனும் படைவீரன் சமயவிடயங்களில் ஆர்வம் கொண்டு அதனை கற்றறிவதற்காக பரிஸ் சென்று பின் அங்கிருந்து ஜெருசலம் சென்றான். ஜெருசலத்தில் துருக்கியர் ஆதிக்கம் பலமாக இருந்ததால் தன் பயணத்தை தொடர முடியாது வெனீஸ் நகரிலேயே தங்கிக் கொண்டான். 
அங்கே தங்கியிருந்தபோது 1534ல் ஒரு சபையினை தாபித்தார். இது இயேசு சபை என அழைக்கப்பட்டதுடன் அதனை தாபித்த டொன் இனிக்கோ லோபெஸ் டி றிகால்டி என்பவரும் இக்நேசியஸ் லோயலா(1491-1556) என அழைக்கப்படலானார். இச்சபை மீது ஆரம்பத்தில் பாப்பரசர் நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் 1540 அளவில் அதனை அங்கீகரித்தார்.
இச்சபையின் செயற்பாட்டுக்கு இக்நேசியஸ் லோயலா என்பவரால் எழுதப்பட்ட 'ஆத்ம அப்பியாசம்' எனும் நூல் அடிப்படையாக அமைந்தது. 'யேசு சபைக் குருமார்'(ஜெசூட்டுக்கள்) என அழைக்கப்பட்ட இவர்கள் வறுமை> நேர்மை> தாழ்மை> பாப்பரசரில் விசுவாசம் என்பவற்றை தம் வாழ்வில் பிரதான அம்சங்களாக கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். மேலும் இவர்கள் கடுமையான சந்நியாச முறைகளைக் கையாளாமல் உலகத்தோடு சேர்ந்து நடந்து தேவாலயத்திற்காக சேவைகளை புரிந்து வந்தனர்.  
இச்சபையினரின் நோக்கங்களாக அதன் சாசனத்தில் பின்வருவன கூறப்பட்டன:
1. உலகெங்கும்> பிரதானமாக புரட்டஸ்தாந்து நாடுகளில் சமயத் தொண்டுகளை செய்தல்.
2. போதனை செய்தலும் மனத்தை நல்வழிப்படுத்தலும்.
3. சிறுவர்க்கு கல்வி புகட்டல்.
இவர்கள் புரட்டஸ்தாந்து நாடுகளில் ஆற்றிய சேவையினால் பலரும் மீண்டும் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக் கொண்டனர். குறிப்பாக 17ம் நூற்றாண்டில் சாக்சனிய தேசத்து இளவரசரை மதம் மாற்றினார்கள். அதே போல் ஸ்கொட்லாந்தைச் Nசர்ந்த ஸ்ரூவர்ட் அரச வம்சத்தினரையும் மதம் மாற்றினார்கள். 
இயேசு சபையினர் மேடைகளிலே செய்த பிரச்சாரங்கள்> மதக் குழப்பங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு ஆறுதல் அளிப்பதாய் அமைந்தது.
இச்சபையினர் கல்விக்கு ஆற்றிய சேவைகளும் முக்கியமானவைகளாகும். உலகின் பல பகுதிகளிலும் பாடசாலைகளையும்> கல்லூரிகளையும் நிறுவி உயர்தரமான கல்வியை உறுதிப்படுத்தினர். இத்தாலி> பிரான்ஸ்> நெதர்லாந்து> கத்தோலிக்க ஜெர்மனி போன்ற நாடுகளில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்கள் சிறப்பாக இயங்கின. போத்துக்கல்> ஸ்பெயின் போன்ற நாடுகளின் கல்வித்துறையை யேசு சபையே முற்றாக பெறுப்பெடுத்துக் கொண்டது. இதனால் சமயத்தை மீண்டும் முன்னைய நிலைக்கு கொண்டு வருவதில் பெரு வெற்றியினைப் பெற்றனர். 
17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கத்தோலிக்க சமயத்திற்கும் பாப்பரசருக்கும் விசுவாசமா இருந்த இச்சபையினர் உலக நாடுகளில் பெரு மதிப்புற்று விளங்கியமைக்கு அவர்களது சபையின் சிறந்த ஒழுங்கமைப்பும் காரணமாகும். இச்சபையினை உருவாக்கிய இக்நேசியஸ் லோயலா என்பவர் இராணுவ அதிகாரியாக இருந்தமையால் சயையிலும் இராணுவ ஒழுங்கமைப்பினை பின்பற்றினார். இயேசு சபையினர் தம்மை பாப்பரசரின் இராணுவத்தினராகவே கருதினர். இச்சபையில் இணைவோருக்கு ஆரம்பத்திலேயே கீழ்ப்படிவு என்பது கற்பிக்கப்பட்டது.
எதிர் சமய சீர்திருத்தத்தில் முக்கிக்கியமான பங்கினை ஆற்றியது டிரென்ட் என்ற இடத்தில் கூட்டப்பட்ட மகாநாடாகும். புரட்டஸ்தாந்து மதவிரோதத்தை தீர்ப்பதற்கு இம்மாநாட்டினை 1545; பாப்பரசர் 3ம் போல் கூட்டினார். இம்மாநாடானது 1563 வரையும் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களை நடத்தியது. டிரென்ட் சபையின் கடைசிக் கூட்டம் 1562-1563 ல் நடந்தது. இக்கூட்டத்தில் கத்தோலிக்க சமயத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான பல திட்டங்களை வகுத்து கத்தோலிக்க சமயத்தை மீள புணருத்தாபனம் செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
டிரென்ட் சபையின் பணிகளாவன.
1. திருச்சபையினை சீர்திருத்துதல். திருச்சபை குருமாரிடம் காணப்பட்ட குறைபாடுகளை திருத்த முற்பட்டது. பிஷப்பாண்டவர்கள் அவர்களது வாசஸ்தளங்கலிலேயே இருக்க வேண்டும் என விதித்ததோடு குருமாருக்கு சிறப்பான கல்வியும் வழங்க கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன.
2. மரபு வழியில் உறுதியாக நின்ற சபையானது வேத பண்டிதர்களின் ஆராய்ச்சியை ஏற்றுக் கொண்டதுடன் புரட்டஸ்தாந்தினர் கண்டித்த ஒவ்வொரு விடயங்களையும் வரலாற்று ரீதியாக மீண்டும் நிரூபித்தது.
3. பக்தியின் மட்டும் மூலமாகவே மேட்சம் அடையலாம் என்ற புரட்டஸ்தாந்தரின் கருத்துக்களுக்கு மாறாக மோட்சம் அடைய நற்கருமங்களையும் ஆற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
4. கத்தோலிக்க வேதாகமத்திலிருந்து அணுவளவு பிசகினாலும் பெரும் பழிஏற்படும் என வற்புறுத்தப்பட்டது.
5. 'டிரெண்ட் சபையினால் தீர்மானிக்கப்பட்ட கோட்பாடுகளும் விதிகளும்' என்ற பெயரில் உத்தியோக பூர்வ சட்டங்கள் பிரசூரிக்கப்பட்டன.
6. பாப்பாண்டவரின் அந்தஸ்து உயர்ந்தது. பாப்பாண்டவரா திருச்சபையா உயர்ந்தது என்ற பிரச்சினை திருச்சயையில் ஏற்பட்டபோது பத்தி> நிர்வாகம் போன்ற விடயத்தில் பாப்பரசர்களே அதிகாரமுடையவர்கள் என திருச்சயை வலியுறுத்தியது.
7. வாசிக்கத்தகாத நூல்கள் அடங்கிய பட்டியல்லொன்றை பாப்பாண்டவர் வெளியிட வேண்டும் என சபைதீர்மானித்தது. இதன்படி நியமிக்கப்படடட சபை 1564ல் தனது முதல் அறிக்கையை வெளிப்படுத்தியது. 



மேலதிக வாசிப்புக்குரிய நூல்கள்
1. ஐரோப்பிய வரலாறு – பேடினன்ட் ஷெவில்
2. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம்> இரண்டாம் பாகம் - பேராசிரியர் எஸ்.ஏ.பேக்மன்> ஜி.ஸி.மெண்டிஸ்
3. உலக சரித்திரம் 1500 – 1948> மு.இளையதம்பி 

Comments

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.