Posts

Showing posts from 2021

இலங்கையை ஆண்ட பிரித்தானிய ஆளுநர்கள்

Image
  எமது இத்தளத்தில் இலங்கையை ஆண்ட பிரித்தானிய ஆளுனர்கள் எனும் தொடர் கட்டுரையானது 12.09.2021 முதல் வெளிவரவுள்ளது. வரலாறு, அரசறிவியல் பாடத்தை கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், ஆர்வமுடைய ஏனையோருக்கும் இத்தொடர் உதவும் என எதிர்பார்க்கின்றோம். இவ் இணைப்பினூடாக தினமும் புதிய அங்கங்களைப் பார்வையிடலாம்.  பார்வையிட இங்கு அழுத்தவும்

ஜேர்மனியில் நாசிஸத்தின் வளர்ச்சி

1.1 வளர்ச்சிக்கு ஏதுவான காரணிகள் 1. பாசிஸத்தைப்போலவே நாசிஸமும் வளர்ச்சியடைவதற்குரிய பின்னணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு முதலாம் உலகப்போருக்கே உரியது. ஜேர்மனியில் 1918 நவம்பரில் குடியரசு அரசாங்கம் உருவானதுடன் 1919ல் வைமார் அரசியல் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு உருமான வைமார் குடியரசானது தொழிலின்மை, பட்டினி, பஞ்சம் போன்றவற்றுக்குத் தீர்வினைத் தரவில்லை. இதைவிடவும் இத்தகைய புதிய ஆட்சியானது ஜேர்மனிய மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக அமையைவில்லை. இதனால் குடியாட்சிக்கு தேசிய வலதுசாரிகளைக்கொண்ட தேசியகட்சியும், தீவிர இடதுசாரிகளைக்கொண்ட பொதுவுடமைக் கட்சியும்  எதிர்ப்புத் தெரிவித்தது.

இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி

1.1 வளர்ச்சிக்கு ஏதுவான காரணங்கள் 1. முதலாம் உலகயுத்தத்தில் வெற்றிபெற்ற நேச நாடுகளின் அணியில் இத்தாலி இருந்தாலும் யுத்த வெற்றியின் பின்னர் தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது போனதால் இத்தாலியர் ஏமாற்றத்துக்குள்ளாயினர். குறிப்பாக 1915ல் லண்டன் ஒப்பந்தத்தின் மூலம் நேசநாடுகளால் இத்தாலிக்கு பல பிரதேசங்களை தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாது போனது. இது தொடர்பில் மத்தியதர வர்க்கத்தினரும் தொழில் நிபுணர்களும் பெரும்பாலான மக்களும் உணர்ந்து செயற்பட்டமையே பாசிஸம் வளரக் காரணமானது. 
  ரஷ்ய புரட்சி மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்பினையும் முற்றாக மாற்றிப்போட்டன. அத்தகைய புரட்சிகளுள் ரஷ்யப்புரட்சியானது முக்கியத்துவமிக்கதோர் புரட்சியாகும். இப்புரட்சியானது ஏனைய புரட்சிகளிலிருந்து வேறுபடக் காரணம் கால்மாக்சினது பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு செயலுருக்கொடுத்த புரட்சி இது என்பதனாலாகும். புரட்சியின் பயனாக சோவியத் குடியரசுகளின் கூட்டமைப்பு தாபிக்கப்பட்டு 1991 வரை நீடித்தது.

நெப்போலியன் போனபாட் NapolianBonaparte (1769-1821)

இத்தாலியின் ஜெனோவா குடியரசில் கார்சிகா தீவில் அஜாகியோ ( Ajacio ) எனுமிடத்தில் 1769 ஆகஸ்ட் 15 ல் பிறந்தார் . இவரது தாய் லேடீசியா ரோமாலினோ ( Letizia Romalino ), தந்தை கார்லோ போர்னபார்ட் . ( CarloBonararte ) கார்சிகா ( Corsica ) தீவில் ஏற்பட்ட புரட்சியை அடக்க முடியாத ஜெனோவா குடியரசு அத்தீவை 1768 ல் 15 ம் லூயி அரசரிடம் கொடுத்ததால் அது லூயி அரசரின் தீவானது . தனது 10 வயது வரை பிரையன் - இலும் பின் பரிஸ் - ஸிலும்   இராணுவப் பயிற்சியினை நெப்போலியன் பெற்றார் . பிரான்சில் ரூசோ பற்றிக்கற்ற அவர் கார்சிக்கா தீவை விடுவித்து ஒரு குடியரசாக்க வேண்டும் என எண்ணினார் .

அமெரிக்கப் புரட்சி

1453ல் கொன்தாந்திநோபிள் ஒட்டோமன் துருக்கியரால் கைப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பியருக்கிருந்த கீழைத்தேயங்களுக்கு செல்வதற்கான பாதைகள் அடைக்கப்பட்டன. இதனால் புதிய பாதைகளைக் கண்டறிவதற்கான முயற்சியிலும், தமது ஆதிக்கத்தினை உலகின் ஏனைய பகுதிகளில் விஸ்தரித்துக் கொள்வதற்கான முயற்சியிலும் ஐரோப்பாவில் தோன்றிய தேசிய அரசுகள் முன்னின்று செயற்பட்டன. இதனால் நாடுகாண் பயணங்களுக்கு அரசுகளின் அனுசரணை கிடைக்கப்பெற்றது. இக்காலத்திலே தோன்றிய புவியியல் சார்ந்த அறிவின் விருத்தியும் அத்தகைய நாடுகாண் பயணங்களுக்கு உறுதுணையானது.

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

முப்பதாண்டு யுத்தம்

  ஐரோப்பாவின் பல அரசுகள் புரட்டஸ்தாந்து மதத்தினை ஏற்றக் கொண்டமையினால் சமய ரீதியாக ஐரோப்பா இரண்டானது. இக்காலத்தில் ஐரோப்பாவில் ஜேர்மனை மையமாகக் கொண்டு புரட்டஸ்தாந்து சமயத்தவருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவருக்கும் இடையே 1618 -1648 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தமே முப்பதாண்டு யுத்தம் எனப்படுகிறது. 

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.

ஐரோப்பாவில் தோன்றிய சில தேசிய அரசுகள்

இங்கிலாந்து ஆரம்பத்தில் சாக்சனியர்கள் இங்கிலாந்துக்குப் படையெடுத்துச் சென்று அங்கிருந்த சிறு இராச்சியங்களை சுதந்திரமானதாக்கினர். பின்னர் 1066ல் வில்லியத்தின் தலைமையிலான நோர்மன்கள் இங்கிலாந்துக்குப் படையெடுத்துச் சென்று அங்கிருந்த சிறு இராச்சியங்களை ஒன்றுபடுத்தினர். ஆயினும் அதிகாரம் படைத்த பிரபுக்கள் இக்காலத்தில் அடக்கப்படவில்லை 

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.