1.1 வளர்ச்சிக்கு ஏதுவான காரணங்கள்
1. முதலாம் உலகயுத்தத்தில் வெற்றிபெற்ற நேச நாடுகளின் அணியில் இத்தாலி இருந்தாலும் யுத்த வெற்றியின் பின்னர் தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது போனதால் இத்தாலியர் ஏமாற்றத்துக்குள்ளாயினர். குறிப்பாக 1915ல் லண்டன் ஒப்பந்தத்தின் மூலம் நேசநாடுகளால் இத்தாலிக்கு பல பிரதேசங்களை தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாது போனது. இது தொடர்பில் மத்தியதர வர்க்கத்தினரும் தொழில் நிபுணர்களும் பெரும்பாலான மக்களும் உணர்ந்து செயற்பட்டமையே பாசிஸம் வளரக் காரணமானது.
2. முதலாம் உலகப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட வல்லரசாக இத்தாலி விளங்கியது. இதற்குக் காரணம் யுத்தத்திற்காக இத்தாலி பெருந்தொகையை செலவிட்டதுடன் யுத்தத்தினால் இத்தாலியின் கைத்தொழில், வியாபாரம் என்பன சீரழிவுற்றமை, வேலையின்மை அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு என்பனவாகும். இதனால் இத்தாலியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக நாட்டிலிருந்த ஆட்சியும் தளர்வுறத் தொடங்கியது.
3. இத்தகைய நிலையிலேயே இடதுசாரி இயக்கங்கள் இத்தாலியில் தொன்றின. மாக்ஸிஷத்தை அனுசரித்த சோஷலிஸ ஜனநாயகக் கட்சியும் தீவிரத் தன்மை கொண்ட இடதுசாரிகளான சிண்டிகலிஸ்ட் எனப்பட்டோரும் நாட்டில் பல்வேறு கலகங்களை உண்டாக்கி உற்பத்திக் கருவிகளையும் நிலங்களையும் கைப்பற்ற முயன்றனர். இது சீர்குலைந்திருந்த இத்தாலியின் சமூகப் பொருளாதார நிலையினை மேலும் சீரழித்தது. இதனை எதிர்த்த தேசிய வாதிகள் மூலம் உருவானதே பாசிஸ இயக்கமாகும். 1919 மார்ச்சில் முஸோலினி தலைமையில் பாசிஸ கட்சி தொடங்கப்பட்டது.
4. நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சிகள் கலகங்களால் அரசாங்கம் செயலற்ற தன்மையை அடைந்தது. இந்நிலையைக் கண்டித்து முஸோலினி 1922 ஒக்டோபரில் ரோம் மீது படையெடுக்க கட்டளை பிறப்பித்ததுடன் மந்திரி சயையும் உடனே பதவியை விட்டு விலக வேண்டும் என தந்தியனுப்பினார். இதனால் அரசுக்கும் பாசிஸவாதிகளுக்கும் இடையே எப்போதும் சண்டை வரலாம் என்ற நிலை காணப்பட்டபோது இத்தாலி அரசன் விக்டர் இமானுவல் புதிய மந்திரி சபையை அமைக்குமாறு அழைப்புவிடுத்தார்.
5. இதன்படி முஸோலினி முதல் மந்திரியானதும் பாராளுமன்றம் தனக்கு சர்வாதிகாரத்தை வழங்க வேண்டும் என வேண்டியான். அவ் அதிகாரம் வழங்கப்பட்டதும் எதிர்க்கட்சிகளை கலைத்துவிட்டு இத்தாலியில் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்பட்டது. அரசனும் அரசியலமைப்பும் செயலற்றுப்போனதுடன் சட்ட, நிர்வாக அதிகாரம் முஸோலினியின் கைக்கு மாறியது.
1.2 இயல்புகள்
1. முதலாம் உலகயுத்தத்தில் இத்தாலி வெற்றிபெற்ற நாடுகளின் பக்கம் இருந்த போதும் அவ்யுத்தத்தின் பலன்கள் இத்தாலிக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அமையவில்லை. இதன் காரணமாக இத்தாலி வல்லரசுகளுள் மிகப் பலவீனமான நாடானது. இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய மனோபாவமுள்ள மக்கள் எதிர்ப்புக் கலகங்களில் ஈடுபடத்தொடங்கினர். இவ்வாறு உருவான பாஸிஸ்ட் இயக்கம் முசோலினியால் தலைமைதாங்கப்பட்டது. அக்காலத்தில் காணப்பட்ட ஆட்சிமுறைகளுள் இதுவோர் மாறுபாடான ஆட்சியாக விளங்கியது.
2. நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க விரும்பிய தேசிய மனோபாவமுள்ள மக்கள் இவ்வாட்சியை விரும்பினர். இவ்வாட்சிமுறையானது பலாத்காரத்தை பிரயோகிப்பதில் கவனம் செலுத்தியதுடன் அரசின் தனி முதன்மையை வலியுறுத்தியது. 'எல்லாம் அரசில் அடங்கியது, அரசுக்கு வெளியே ஒன்றுமில்லை, அரசுக்கு மாறாக ஒன்றுமில்லை' எனவும் பலத்காரத்தை பிரயோகிப்போர் மீது கூடிய பலத்காரத்தை பிரயோகிக்குமாறும் முசோலினி கூறினார். எனவே 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஆட்சிமுறைகளெல்லாம் குடிகளின் நலனுக்கு அரசினை வலியுறுத்த பாசிஸமோ அரசின் நலனுக்கு குடிகள் அவசியம் என வலியுறுத்திற்று.
3. முசோலினி இளம் வயதில் சோஷலிஸ ஜனநாயக கட்சியின் ஒருபிரிவைச் சேர்ந்த சிண்டிகலிஸ்ட் எனும் தீவிர இடதுசாரிப் பிரிவை சேர்ந்தவராகக் காணப்பட்டபோதும் பின்னர் அதிகாரத்தை பெறும் வகையில் முசோலினி தேசிய தீவிரவாதியாக தன்னை மாற்றிக்கொண்டார். தன் முன்னைய நண்பர்களான சோஷலிஸ ஜனநாயக வாதிகளும் சிண்டிகலிஸ்ட் புரட்சிவாதிகளும் உண்டாக்கிய கலகங்கள் நாட்டில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இதனால் இவர் பொதுவுடைமைவாதத்திற்கு எதிரானவராக தன்னை மாற்றிக் கொண்டார். அவர் தனது இக்கட்சி மாறலை 'சுயநலப்பற்றற்ற தேசத்தொண்டு என்றார்'
4. பாஸிஸ்டுக்களின் பொதுவுடைமைக்கு எதிரான கொள்கை காரணமாக எதிரிகளான பொதுவடைமைவாதிகளையும்; சோசலிஸவாதிகளையும் ஒதுங்கச்செய்ய வைத்ததுடன், தொழிற்சங்கங்களும் முற்றாக ஒழிக்கப்பட்டன. ஆயினும் ஓர் தொழிலாளியான முசோலினி தொழிலாளர்களின் உரிமைகளை நம்பிய இவர் தொழிலாளர் பட்டயம் (ஊhயசவநச ழக டுழடிழரச) ஒன்றை வெளியிட்டார். ஆயினும் உரிமைகளைக் கொண்டு புரட்சி நடத்துவதை அவர் விரும்யவில்லை.
5. பொருளுட்பத்திக்கு முதலாளித்துவம் அவசியம் என பாசிஸவாதிகள் உணர்ந்தார்கள். பொருளாதார நோக்கில் முதலாளியும் தொழிலாளியும் ஒன்றுபட்டு உற்பத்தியை இடையறாது மேற்கொண்டு சமூகத்தின் வாழ்வை நிலைநிறுத்துதல் அவசியம் எனக்கருதினர். இதனால் முசோலினியினது பாசிஸக் கொள்கையானது சமூகவுடைமைக் கொள்கையும் முதலாளித்துவமும் இணைந்ததொரு புதிய கொள்கையாக விளங்கியது.
6. பாசிஸ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான பாசிஸ சட்டங்கள் மூலமாக வேலைநிறுத்தம் தடுக்கப்பட்டது, பத்திரிகைகள் தீவிர கண்காணிப்புக்கு உற்படுத்தப்பட்டது, அரசுக்கு எதிரானவர்கள் iகுது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர், ஏனைய கட்சிகள் கலைக்கப்பட்டன, நிர்வாகிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர். இத்தகைய கொள்கைகளால் பாசிஸம் சனநாயகத்துக்கு எதிரானதாக அமைந்தது.
7. பாசிஸ ஆட்சியில் பாசிச கட்சியும் இராணுவமும் பலப்படுத்தப்பட்டது. கட்சியின் நிரந்தர தலைவராக முஸோலினி விளங்கியதுடன் கட்சியின் தலைவர் 'டியூஸ்' (னுரஉந) என அழைக்கப்பட்டார். சிறிய உத்தியோகஸ்தர் தொடக்கம் மந்திரிகள் வரை அவர்களின் முக்கிய பணியகக் காணப்பட்டது பாசிஸ கொள்கைகளை பரப்புவதாகும். இதற்காக ஊடகங்கள் யாவும் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. பாசிஸ்டுக்கள் தடியையும் கோடரியையும் தமது சின்னமாக பயன்படுத்தியதுடன், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பழைய ரோமானிய முறைப்படி வலக்கையை நீட்டி வணக்கம் செலுத்தினர். பாசிஸ்ட் இராணுவம் கருப்புச் சட்டை அணிந்திருந்ததுடன் தலைக்கு தொப்பியும் அணிந்தனர்.
1.3 விளைவுகள்
1. யுத்தத்திற்கு பின்னர் ஏற்படும் அழிவுகளிலும் கிளர்ச்சிகளிலும் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு பலமுள்ளதொரு அரசாங்கமுறை தேவைப்பட்டது. அதனை நடைமுறையிலிருந்த ஆட்சிமுறையினால் வழங்க முடியவில்லை. எனவே இத்தாலியில் காணப்பட்ட தேசிய உணர்வுள்ளோரை இணைத்துக்கொண்டு நாட்டை விருத்தி செய்யும் ஓர் அரசாங்கத்தை பாசிஸ கட்சியினால் உருவாக்க முடிந்தது.
2. யுத்தத்தாலும் கிளர்ச்சியாலும் உண்டான அழிவுகளை நிவர்த்தி செய்யவும் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணவிக்கத்தைக் கையாள அரசாங்க செலவீனம் குறைக்கப்பட்டதுடன் புதிய வரி விதிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 1925 அளவில் இத்தாலியின் பொருளாதாரம் சீரடைந்ததுடன் மேலதிக வருமானமும் கிடைக்கப்பட்டது. இக்காலத்தில் லையரின் பெறுமதி டொலருக்கு 19ஆக அதிகரித்தது.
3. ஆல்ப்ஸ், ஆல்பைன் மலையிலிருந்து உருவான நீர்வீழ்ச்சிகள் மூலம் நீர்மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு வாய்பாக அமைந்தது. இதனால் பட்டுத்துணி, செயற்கைப்பட்டு என்பன நெய்யும் தொழில் முன்னேற்றமடைந்தது. புகைவண்டி, இயந்திரங்கள், கார், கப்பல் போன்றவை உற்பத்தி செய்யப்படவும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் ஐரோப்பாவில் முக்கிய நாடாக இத்தாலி மாற்றமுற்றது.
4. பல நுற்றாண்டுகாலமாக தரிசு நிலமாகக் கிடந்த நேப்பில்ஸ் - ரோம் நகரங்களுக்கிடையில் இருந்த சதுப்பு நிலம் விளைநிலமாக்கப்பட்டது. 'அரிசி யுத்தம்' என்ற கோசத்துடன் விவசாயம் வளர்க்கப்பட்டது. இதன் பயனாக கோதுமையின் உற்பத்தி 70 வீதமாகவும் அரிசி, கடலை, சோளம் என்பவற்றின் உற்பத்தி 50வீதமாகவும் வளர்ச்சியடைந்தது.
5. 1870ல் இத்தாலி உரோமை கைப்பற்றியது முதற்கொண்டு பாப்பரசர் சிறைவைக்கப்பட்டவராகவே தம்மைக் கருதினார். இத்தாலியுடன் எதுவித தொடர்பையம் அவர் பேணவில்லை. ஆயினும் கத்தோலி;க்க சமயத்தின் சர்வதேச தன்மையின் காரணமாக திருச்சபையை எதிர்ப்பது புத்திசாலித்தனமானது என்றுணர்ந்த முஸோலினி 1929 பெப்ரவரி 11ல் பாப்பரசர் பதினொராவது பயஸ் உடன் பாப்பரசரின் இரண்டாவது அரண்மனை லட்டரனில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். இவ் லட்டரன் உடன்படிக்கையின் மூலமாக நீண்டகால சமயப்பிரச்சினை தீர்க்கப்பட்டது.
6. முஸோலினி பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கைகளால் இத்தாலியின் பெருமைiயை உயர்த்த 1936ல் முசோலினி எத்தியோப்பியாவை கைப்பற்றியார். மேலும் பல நாடுகள் ஆக்கிரமிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டதுடன் 1937ல் சர்வதேச சங்கத்திலிருந்தும் இத்தாலி வெளியேறிக்கொண்டது இதனால் இரண்டாம் உலகயுத்தம் ஏற்படவும் இது வாய்ப்பானது.
Comments
Post a Comment