Skip to main content

A/L Political Science

இதிலுள்ள குறிப்புகள் அனைத்தும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி மற்றும் கடந்தகால உயர்தர பரீட்சை புள்ளித்திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. தற்போதைய சூழ்நிலையில் கல்வி வாய்ப்புகள் முறையாக கிடைக்காத மாணவர்கள் இடையூறுகள் ஏதுமின்றி கற்பதற்கு இவை உதவும் என்ற நோக்கிலேயே இவற்றை பதிவிடுகிறோம்.
நன்றி! 

தரம் 12 அனைத்து அலகுகளுக்குமான குறிப்புக்களை மாணவர்கள் இப்போது பதிவிறக்கம் செய்யலாம். 


அலகு-1 - அரசறிவியலின் இயல்பு, அரசியல் கற்கை மற்றும் அணுகுமுறைகள். 

எமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அம்சம் அரசியலாகும். ஒவ்வொரு மனிதனும் ஒரு அரசின் உள்ளேயே பிறக்கின்றான் ஆகையால் மனிதனுக்கும் அரசியலுக்கும் இடையில் பரஸ்பரமனதும், நேரடியானதும், பிரிக்கமுடியாததுமான தொடர்பு காணப்படுகிறது. எனவே இத்தகைய தொடர்பின் இயல்பினை அறிவது  ஒவ்வொரு செயல்திறன்மிக்க பிரஜைக்கும் அவசியமாகும். அத்துடன் அரசியலை கற்கின்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இது பற்றிய ஆழமான புரிதல் அவசியம். ஒரு மாணவர் அரசியலை ஓர் கற்கை துறையாக கற்பதற்கு முன் அரசியலின் பரிமாணங்களை அறிதல் அவசியமாகும். 


அலகு 2 - அரசறிவியலில் உள்ளடக்கப்படும் உப துறைகள் 


அரசறிவியல் ஆனது ஓர் கல்வித் துறையாக இருபத்தி நான்கு நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ள ஓர் சமூக விஞ்ஞானம் என்ற வகையில் அது உள்ளடக்கியுள்ள உப துறைகளின் பிரதானமானவை பின்வருவனவாகும். 



அலகு 3 - அரசு  

அரசு என்பது வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைந்த ஓர் சமூகத் தோற்றப்பாடாகும். அதன் படி அரசானது ஒரு சமூகத்தாபனம் என்பதுடன் அது மனித சமுகத்தில் உருவாக்கப்பட்டு வரலாற்று ரீதியாக விருத்தி பெற்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் மனித சமூகத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்று அரசாகும். அது வரலாற்று ரீதியாக பல்வேறு வடிவங்களைப் பெற்று வளர்ந்துள்ளது. இதனால் அரசின் இயல்பானது குலமரபு மாதிரியிலிருந்து நவீன அரசுகள் வரை வரலாற்று விருத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வந்துள்ளது.



அலகு -4 - அரசாங்கத்தின் வடிவங்கள்

அரசாங்கம் என்பது அரசின் மிக முக்கிய அங்கமாகும். இது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியது ஆகும். மக்கள் நலன் சார்ந்த கொள்கை உருவாக்கத்திலும், நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் அரசாங்கம் என்பது சட்டம் இயற்றுதல், செயற்படுத்துதல் மற்றும் நீதிவழங்குதல் சார்ந்த பணிகளையும் மேற்கொள்கிறது. சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் நிறைவேற்றுத் துறை ஆகிய மூன்றும் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் அங்கங்கள் ஆகும். இம்மூன்று அங்கங்களும் அரசின் நோக்கங்களுக்குச் செயல்முறை வடிவம் கொடுக்கின்றது. .



அலகு 5 - அரசியல் கருத்தியல்கள்

அரசியல் கருத்தியல்கள் என்பது சமூகத்தில் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நம்பிக்கைகள் அரசியல் சிந்தனைகள் என்பவற்றின் தொகுதியாகும். இவை சமூகத்தின் நம்பிக்கைகளை ஒழுங்கமைகின்றன, மக்களின் அரசியல் இயக்கத்தையும் செயல்பாட்டையும் ஒழுங்கமைக்கின்றன, அரசியல் நிறுவனங்களையும் செயற்பாட்டையும் வடிவமைப்பதில் உதவுகின்றன



அலகு 6 - மோதலும் மோதல் தீர்வும்

பேராசிரியர் கிறிஸ்தோபர் மிற்செல் என்பவர், சர்வதேச மோதல்களின் கட்டமைப்பு (1981) எனும் தனது நூலில், 'பொருந்தாத இலக்குகளைக் கொண்டிருப்பதாக நினைக்கும் இரு தரப்பினருக் கிடையேயான (தனிநபர்கள் அல்லது குழுக்கள்) ஒரு தொடர்பு தான் மோதல் என வரையறுத்துள்ளார். இவ்வகையிற் பார்த்தால், மோதலானது, வேறுபாடுகள், போட்டி அல்லது கருத்து மோதல்கள் என்பதில் இருந்து விலகிச் செல்வதாக, அல்லது இவற்றை விட அதிகமான ஒன்றாகத் தெரிகிறது.


அலகு7 - இலங்கையின் காலனித்துவ நிலைமாற்றம்

உலக வரலாற்றைப் பொறுத்தவரையில் இரு வேறுபட்ட வழிகளில் காலனிகள் உருவாவதை கண்டுகொள்ள முடியும்
1. ஒரு குறிப்பிட்ட அரசினுடைய மக்கள் புதிய நிலப்பரப்பினை கண்டுபிடித்து அங்கு குடியேறி தமது அரசியல் பொருளாதார மற்றும் சமூக நிறுவனங்களை உருவாக்கி புதிய சமூகத்தை தமது தாய் நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரல்
2. ஏற்கனவே மக்கள் வாழ்கின்ற ஒரு நிலப்பரப்பினை ஒரு பலமிக்க அரசானது ஒப்பந்தத்தின் மூலமாக அல்லது யுத்தத்தின் மூலமாக வெற்றி கொண்டு தனது ஆட்சியினை அங்கு தாபித்தல்
இரண்டாவது கூறப்பட்ட முறையின் மூலம் உருவாகின்ற காலனிகளில் காலனித்துவ அரசினுடைய ஆதிக்கம் உயர்வானதாக காணப்படும். இலங்கை இவ்வகையிலேயே காலனித்துவத்திற்கு உட்பட்ட நாடாகும்


அலகு 8 - வெஸ்மினிஸ்டர் அரசியலமைப்பு மாதிரிகளும் அதன் மாற்றங்களும்

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் அமைப்பான சோல்பரி அரசியலமைப்பு வெஸ்ட்மினிஸ்டர் மாதிரி அரசாங்க முறையை ஒத்திருந்தது அதாவது பிரித்தானிய மாதிரியில் அமைந்த அரசாங்க முறையாகும் இதன் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. அரசாங்க கட்டமைப்பில் பாராளுமன்றமானது பிரதான தாபனம் ஆகும்
2. அமைச்சரவையினுடைய அமைச்சர்கள் பாராளுமன்றக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் ஆவர்


தரம் 12 அரசியல் விஞ்ஞான பாடநூல். 
மேலுள்ள அனைத்து குறிப்புகளையும் ஒரே பாடநூல் வடிவில் பெறலாம். 



Comments

  1. good work on your blog. we Appreciate your efforts. continue posting that student can gain lot from the blog.

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ReplyDelete
  3. சூப்பர் வேல sir 🫡

    ReplyDelete
  4. Great work sir. Congratulations

    ReplyDelete
  5. Great work Sir
    Grade 13 Notes Please

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.