இத்தாலியின் ஜெனோவா குடியரசில் கார்சிகா தீவில் அஜாகியோ ( Ajacio ) எனுமிடத்தில் 1769 ஆகஸ்ட் 15 ல் பிறந்தார் . இவரது தாய் லேடீசியா ரோமாலினோ ( Letizia Romalino ), தந்தை கார்லோ போர்னபார்ட் . ( CarloBonararte ) கார்சிகா ( Corsica ) தீவில் ஏற்பட்ட புரட்சியை அடக்க முடியாத ஜெனோவா குடியரசு அத்தீவை 1768 ல் 15 ம் லூயி அரசரிடம் கொடுத்ததால் அது லூயி அரசரின் தீவானது . தனது 10 வயது வரை பிரையன் - இலும் பின் பரிஸ் - ஸிலும் இராணுவப் பயிற்சியினை நெப்போலியன் பெற்றார் . பிரான்சில் ரூசோ பற்றிக்கற்ற அவர் கார்சிக்கா தீவை விடுவித்து ஒரு குடியரசாக்க வேண்டும் என எண்ணினார் .