ஐரோப்பிய வரலாறு மாதிரி வினாத்தாள் 2021(2022)
நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்... பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொண்டேன்... நன்றி!
ReplyDelete