Skip to main content

Posts

Showing posts from February, 2024

மாகாணங்களும் அவை நிறுவப்பட்ட ஆண்டுகளும்

• வடமாகாணம்-1833 • வட மத்திய மாகாணம்-1873 • ஊவா மாகாணம்-1886 • தென் மாகாணம் -1833 • கிழக்கு மாகாணம் -1833 • மேல் மாகாணம் -1833 • மத்திய மாகாணம் -1833 • வடமேற்கு மாகாணம் -1845 • சப்ரகமுவ மாகாணம் -1889

குருணாகலையின் இலக்கிய வளர்ச்சி

குருநாகல் காலத்து இலக்கியம் தம்பதெனிய இலக்கியத்தை விட சற்று பின்தங்கியே உள்ளது. அக்கால நூல்களில் வெளிப்படுத்தப்பட்ட விதிகளும் மரபுகளும் படிப்படியாகக் குறைந்து வரும் இலக்கியத்தின் பண்புகளைக் காட்டுகின்றன.  குருணாகலை இராசதானியின் நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலம் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்விமானான பௌத்த பிக்கு ஒருவரை சோழ நாட்டிலிருந்து வரவழைத்த இம்மன்னன் அத்தேரரின் மூலம் ஜாதக நூலொன்றை எழுதுவித்து பிற்காலத்தில் கல்விமான்களின் மத்திய நிலையமாக விளங்கிய விதாகம ஸ்ரீ கணானந்தா பிரிவெனாவை உருவாக்கி பௌத்த பிக்குகளுக்கு அர்ப்பணித்துள்ளான்.  ஜாதகக் கதைகளை சிங்களத்துக்கு மொழிபெயர்த்ததன் மூலம் உருவான 'சிங்கள ஜாதகப் புத்தகம்' எனும் நூலை வெளியிடுவதற்கு அந்நூலாசிரியருக்கு மன்னன் அனுசரணை வழங்கியுள்ளான்.  பாளி மொழியிலான ஜாதகக் கதைப் புத்தகம் பெரும்பாலும் இந்திய சமூகவமைப்பையும் சமூக சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்ட நூலாக அமைந்த போதிலும் 'சிங்கள ஜாதகப் புத்தகம்' அல்லது 'பன்சீய பனஸ் (550) ஜாதகக் கதைகள்' எனும் நூல் இலங்கை மக்களின் வாழ்க்கையையு...

போத்துக்கல்லின் நாடுகாண் பயணங்கள்

நாடுகாண் பயணங்களில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் போர்ச்சுகல் நாட்டு மக்களேயாவர். ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த காரணத்தினால், அவர்கள் ஆப்பிரிக்கக் கரையோரப் பகுதிகளை முன்பே நன்கறிந்திருந்தனர். ஆப்பிரிக்கக் கடற் கரையைச் சுற்றிவந்து இந்தியாவை அடையவேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.  இதுபோன்ற கடல் பயணங்களை ஊக்குவித்து, உற்சாகத்துடன் செயல்பட்டவர் போர்ச்சுகல் நாட்டு 'இளவரசர் ஹென்றி' (Prince Henry, 1394-1460). கடல் பயணங்களில் இவர் காட்டிய ஆர்வம், இது போன்ற செயல்களுக்கு இவர் அளித்த ஆதரவு காரணமாக, இவர் 'மாலுமி ஹென்றி' (Henry the Navigator) என்றழைக்கப் பட்டார். இவர் மாலுமிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென்று மாலுமிகள் பயிற்சிப் பள்ளி' ஒன்றைத் தொடங்கினார். ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சுற்றிச்சென்று இந்தியாவை அடைய நேரடிக் கடல்வழியொன்றைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது இவரது குறிக்கோள்.  இவருடைய பெருமுயற்சியின் காரணமாக 'அஸோர்ஸ்' (Azores), 'மெடீரா' (Madeira) போன்ற தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டு போர்த்துக்கீசியக் குடியேற்றங்களாக மாறின. 1445-ல் 'க...

கலிங்க மாகவின் ஆக்கிரமிப்பு

பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக்காலம், பொலன்னறுவை இராச்சியத்தின் முடிவைக் குறிக்கிறது, அதாவது கிறிஸ்துவுக்கு பின் 1215 ல் கலிங்க மாகவின் கொடூரமான படையெடுப்பிற்குப் பிறகு, 17 நூற்றாண்டுகளாக செயற்பட்ட ரஜரட்ட நாகரிகமும் முடிவுக்கு வந்தது. இருபத்தி நாலாயிரம் கேரள (சேர) படையைக் கொண்டுவந்து,  பொலன்னறுவையின் கடைசி மன்னன் பராக்கிரம பாண்டியன் (கிறிஸ்துவுக்கு பின் 1212 - 1215) என்பவனைக் கைது செய்து, கண்களை குருடாக்கி கொன்று அழித்ததை மகாவம்சத்தின் இரண்டாம் பாகம் பதிவு செய்துள்ளது. நாட்டின் மீது படையெடுத்த மற்ற படையெடுப்பாளர்களுடன் ஒப்பிடும்போது கலிங்க மாக மிகவும் வன்முறை மிக்க மற்றும் கொடூரமான படையெடுப்பாளர் ஆவார். ராசரட்ட ராஜ்ஜியத்தின் நாகரீகத்திற்கு அவர் செய்த அழிவு கொஞ்சநஞ்சமல்ல. அவரது நேரடித் தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தின் மீது மட்டுமல்ல, கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் மீதும் இருந்தது.  மாக கலிங்க தேசத்திலிருந்து படையெடுத்தார், இது இன்றைய இந்தியாவின் "ஒரிசா" ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய ஒரிசா, இலங்கையுடன் நீண்டகாலமாக நட்புறவைக் கொண்ட பிரதேசமாகும். பொலன்னறுவை காலத்தி...

கோட்டைக்கால கல்வி

 கோட்டே யுகத்தில் கல்வி இக்காலத்தில் பிரிவெணா கல்வி மிக உயர்ந்த நிலையில் இருந்தது சந்தேச இலக்கியங்களில் இருந்து தெரிகிறது. கிரா சந்தேஷவில் விஜயபா பிரிவேனாவைப் புகழ்வதும், ஹம்ச சந்தேஷவில் பத்மாவதி பிரிவேனாவைப் புகழ்வதும் உதாரணங்களாகும். இக்காலத்தில் தோட்டகமுவ விஜயபா பிரிவேனா, வீதாகம ஞானானந்த பிரிவேனா, தெவிநுவர இருகல்குலதிலக பிரிவேனா, கேரகல பத்மாவதி பிரிவேனா, பாப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனா, எரபத்தோட்ட தர்மராஜா பிரிவேனா (එරබත්තොට ධර්මරාජ පිරිවෙන), போன்ற பல புகழ்பெற்ற பிரிவேனாக்கள் இருந்தன.  இந்த கல்வி நிறுவனங்கள் சாதாரண மாணவர்களுக்கு மட்டும் அல்லாது பிக்குமாருக்கும் போதித்து. இவற்றில் மொழியியல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், ஆயுர்வேதம், தொழில்நுட்பம், நீர்ப்பாசன அமைப்புகள், சிற்பம் மற்றும் கட்டிடக்கலை போன்ற பல பாடங்கள் கற்பிக்கப்பட்டன. தொட்டகமுவாவின் ஸ்ரீ ராகுல மகாதேரர், வீடாகம மைத்ரேய மகாதேரர், கேரகலையின் வனரதன மகாதேரர், ஆறாம் பராக்கிரமபாகு மன்னன், நன்னூரு துன்யர், மன்னரின் மருமகன்,(රජුගේ බෑණනුවන් වූ නන්නුරු තුනයාර්), தோட்டகமுவ ஸ்ரீ ராகுல தேரரின் இந்திய மாணவரான ஸ்ரீ ராமச்சந...

கண்டி இராச்சியம்

கண்டி, இலங்கையின் மத்திய மலைப்பகுதியை மையமாகக் கொண்ட ஒரு இராச்சியம். அது செயற்பட்ட காலத்தின் அடிப்படையில் இலங்கையில் மிக நீண்ட காலம் நிலவிய இரண்டாவது இராச்சியம் இதுவாகும். நாயக்கர் குல மன்னன் மற்றும் அவரைச் சுற்றியிருந்த பிரபுத்துவ வர்க்கத்தினரின் செயற்பாடுகள், அதிகாரப் பேராசை ஆகியவற்றினால் அவ்ராச்சியம் வீழ்ச்சியடைந்தது. இல்லாவிட்டால், அதன் ஆட்சி இன்னும் நீடித்திருக்கும்.  அனுராதபுர இராச்சியத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இலங்கையின் மத்திய மலைநாட்டில் மக்கள் வாழ்ந்ததற்கான இலக்கிய மற்றும் தொல்பொருள் சான்றுகள் உள்ளன. சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோமோ சேபியன்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர், சிறிது காலத்திற்குப் பிறகு, அவர்களின் வாழ்விடங்கள் பெரும்பாலும் ஈர வலயத்திலும் ஓரளவில் உலர் வலயத்திலும் பரவின. இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் மத்திய மலைநாட்டில் காணப்படுகின்றன. அதன் பிறகு, முன்வரலாற்று மற்றும் வரலாற்று காலகட்டங்களில், மத்திய மலைநாட்டின் குடியேற்றம் கணிசமாகக் குறைந்தது. காரணம், இலங்கையர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் நல்ல மண், சமவ...