குருநாகல் காலத்து இலக்கியம் தம்பதெனிய இலக்கியத்தை விட சற்று பின்தங்கியே உள்ளது. அக்கால நூல்களில் வெளிப்படுத்தப்பட்ட விதிகளும் மரபுகளும் படிப்படியாகக் குறைந்து வரும் இலக்கியத்தின் பண்புகளைக் காட்டுகின்றன.
குருணாகலை இராசதானியின் நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலம் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்விமானான பௌத்த பிக்கு ஒருவரை சோழ நாட்டிலிருந்து வரவழைத்த இம்மன்னன் அத்தேரரின் மூலம் ஜாதக நூலொன்றை எழுதுவித்து பிற்காலத்தில் கல்விமான்களின் மத்திய நிலையமாக விளங்கிய விதாகம ஸ்ரீ கணானந்தா பிரிவெனாவை உருவாக்கி பௌத்த பிக்குகளுக்கு அர்ப்பணித்துள்ளான்.
ஜாதகக் கதைகளை சிங்களத்துக்கு மொழிபெயர்த்ததன் மூலம் உருவான 'சிங்கள ஜாதகப் புத்தகம்' எனும் நூலை வெளியிடுவதற்கு அந்நூலாசிரியருக்கு மன்னன் அனுசரணை வழங்கியுள்ளான்.
பாளி மொழியிலான ஜாதகக் கதைப் புத்தகம் பெரும்பாலும் இந்திய சமூகவமைப்பையும் சமூக சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்ட நூலாக அமைந்த போதிலும் 'சிங்கள ஜாதகப் புத்தகம்' அல்லது 'பன்சீய பனஸ் (550) ஜாதகக் கதைகள்' எனும் நூல் இலங்கை மக்களின் வாழ்க்கையையும் சமூகவமைப்பையும் பிரதிபலிக்கும் நூலாக அமைந்திருந்தது என்பது கல்விமான்களின் கணிப்பாகும்.
நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் வேண்டுகோளின் பேரில் தம் ரூ தம் பசங்கினா என்பவரால் எழுதப்பட்ட 'தலதா சிறித' எனும் நூல் புனித தந்ததாதுவின் வரலாற்றையும் அதற்கான வணக்க வழிபாட்டு முறைகளையும் விளக்கும் நூலாகும். குருணாகலை யுகத்தில் வாழ்ந்த பிரபல்யமான பண்டிதரும் களனி விகாரையின் தலைமைப் பிக்குவுமான வில்கம்முல ஸ்ரீ பராக்கிரம மகா தேரரால் 'எலு போதி வம்சம்' மற்றும் 'அநாகதவம்சம் எனும் இரு நூல்கள் இயற்றப்பட்டன.
முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் இறுதிக் காலப் பகுதியிலிருந்து நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் காலம் வரையிலான வரலாற்றுத் தகவல்களுடன் கூடிய மகாவம்சத்தின் மூன்றாம் பாகம் (சூளவம்சத்தின் இரண்டாம் பாகம்) எழுதப்பட்டதும் இக்காலப் பகுதியிலாகும். இவை தவிர சீலவங்ச எனும் பிக்குவால் எழுதப்பட்ட ‘தாது மஞ்சுசா' எனும் பாளி இலக்கண நூலும் குருணாகல் இராசதானிக் காலத்துக்குரியதாகும்.
Comments
Post a Comment