கண்டி, இலங்கையின் மத்திய மலைப்பகுதியை மையமாகக் கொண்ட ஒரு இராச்சியம். அது செயற்பட்ட காலத்தின் அடிப்படையில் இலங்கையில் மிக நீண்ட காலம் நிலவிய இரண்டாவது இராச்சியம் இதுவாகும். நாயக்கர் குல மன்னன் மற்றும் அவரைச் சுற்றியிருந்த பிரபுத்துவ வர்க்கத்தினரின் செயற்பாடுகள், அதிகாரப் பேராசை ஆகியவற்றினால் அவ்ராச்சியம் வீழ்ச்சியடைந்தது. இல்லாவிட்டால், அதன் ஆட்சி இன்னும் நீடித்திருக்கும்.
அனுராதபுர இராச்சியத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இலங்கையின் மத்திய மலைநாட்டில் மக்கள் வாழ்ந்ததற்கான இலக்கிய மற்றும் தொல்பொருள் சான்றுகள் உள்ளன. சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோமோ சேபியன்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர், சிறிது காலத்திற்குப் பிறகு, அவர்களின் வாழ்விடங்கள் பெரும்பாலும் ஈர வலயத்திலும் ஓரளவில் உலர் வலயத்திலும் பரவின. இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் மத்திய மலைநாட்டில் காணப்படுகின்றன. அதன் பிறகு, முன்வரலாற்று மற்றும் வரலாற்று காலகட்டங்களில், மத்திய மலைநாட்டின் குடியேற்றம் கணிசமாகக் குறைந்தது. காரணம், இலங்கையர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் நல்ல மண், சமவெளி மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற சூரிய ஒளி உள்ள வறண்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
ஆனால் துட்டகைமுனு, வலகம்பா போன்ற அரசர்களுடன் தொடர்புடைய வரலாற்றினை படிக்கும் போது, மத்திய மலைப்பகுதியில் குடியேற்றங்கள் இல்லாத சூழல் உருவாக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. மலைப்பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் குடியிருப்புகள் இருந்தன. இதன் காரணமாக, கடந்த காலங்களில் மன்னர்கள் இந்த மத்திய மலையை ஒரு தனி நிர்வாக அலகாக ஆள வேண்டியிருந்தது.
இருப்பினும், கண்டி இராச்சியம் நிறுவப்பட்டவுடன் மத்திய மலைநாட்டின் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்தது. அதற்கு முன், குருநாகல், கம்பளை போன்ற அரசுகள் மத்திய மலைகளிலும் அதைச் சுற்றியுள்ள மலைத் தொடர்களிலும் எழுந்தன, ஆனால் அவை மிகவும் சக்திவாய்ந்த இராச்சியங்கள் அல்ல. கி.பி 1415 ஆம் ஆண்டு ஆறாம் பராக்கிரமபாகு அரசன் கோட்டையை அடிப்படையாகக் கொண்டு கோட்டை இராச்சியத்தை ஆரம்பித்தபோது, கண்டி கோட்டை மன்னரின் கீழ்ப்பட்ட பிரதேசமாக இருந்தது. அதன் ஆட்சியாளர் ஜோதிய என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இந்தக் காலப்பகுதியில்தான் கண்டி முதன்முறையாக சுதந்திரத்திற்காக முயற்சித்தது.
ஜோதிய, வழக்கப்படி அரசனுக்கு வழங்கப்பட வேண்டிய நிலப்பிரபுத்துவ கடமை மற்றும் ஆண்டு வரி வருவாய் செலுத்தத் தவறிவிட்டார். இந்தச் சூழ்நிலையை சுதந்திரத்திற்கான முயற்சியாகக் கருதி, அரசர் பராக்கிரமபாகு இளவரசர் அம்புலுகலவின் கீழ் ஒரு படையை அனுப்பி அதைக் கட்டுப்படுத்தி அதன் விவகாரங்களை இளவரசர் அம்புலுகலவிடமே ஒப்படைத்தார். மலையகத்தின் சுதந்திரம் கோட்டை அரசை பாதிக்கும் அளவுக்கு கண்டி ஒரு முக்கியமான நிர்வாக அலகாக இருந்ததை இது காட்டுகிறது.
கண்டியின் சுதந்திரத்திற்காக ஜோதியா சித்தான எடுத்த முதல் அடி தோல்வியடைந்தாலும், அதன் பின் இளவரசர் சேனசம்மத்த விக்கிரமபாகு எடுத்த நடவடிக்கைகள் வெற்றியடைந்தன. அன்றைய கோட்டேயில் இருந்த அரசியல் சூழலும் அது வெற்றியடைய உதவியது.
மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவின் மகளான இளவரசி உலகுடைதேவியின் மகனான ஐயபாகு மன்னராக பதவியேற்றார். ஆனால் அந்த மன்னன் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களில் சபுமல் குமாரயா படையுடன் வந்து மன்னன் ஜயபாகுவை (ஜயவீர பரராக்கிரமபாகுவைக்) கொன்று கோட்டேயின் அதிகாரத்தைக் கைப்பற்றினான். அந்த நிகழ்வோடு, யாழ்ப்பாணம் மீண்டும் ஆரியச் சக்கரவர்த்திக்கும், யாழ்ப்பாணத்துக்கும் ரஜரட்டைக்கும் இடைப்பட்ட நிலம் மீண்டும் வன்னியர்களுக்கும் சொந்தமானது.
இளவரசர் சபுமல் ஆறாம் புவனேகபாகுவாக ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே யாழ்ப்பாணம், வன்னி பிரதேசங்கள் சுதந்திரமடைந்தது மட்டுமன்றி, பஸ்துன் கோரளையை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான கிளர்ச்சியும் இடம்பெற்றது. இது சிங்கள சங்கய என்று அழைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் களனி டோல ஸ்ரீ வர்தன பத்திராஜா மற்றும் பஸ்துன் கோரள கிராகம தேரர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். அரசர் ஆறாம் புவனேகபாகு இது போன்ற பல சவால்களை எதிர்கொண்டார், மேலும் அவர் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான கவனத்தை இழந்தார் என்று தோன்றுகிறது.
இக்காலத்தில்தான் சேனாசம்மத விக்ரமபாகு கண்டியை சுதந்திர நாடாக்கினார். அப்போது கோட்டே ராஜதானியின் கீழ் நான்கு கோரளை (சத்தர கோரள) இருந்த போதிலும், தலைவர்கள் கண்டிக்கு விசுவாசமாக இருக்கும் சூழல் இருந்தது. கோட்டே அரசர் ஆறாம் புவனேகபாகு அந்தச் சூழலை அடக்கி மீண்டும் நான்கு கோரளையின் அதிகாரத்தைத் தக்கவைத்து வெற்றி கண்டார், ஆனால் கண்டியைக் கட்டுப்படுத்தத் தவறினார். இதன் காரணமாக, கண்டி மத்திய மலையகத்தின் மலைத்தொடர்களில் சுதந்திரமாக வெளிப்படும் திறனைப் பெற்றது.
புவியியல் அமைவிடம்
புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்தவரை கண்டி இராச்சியம் மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தது. அதன் நிர்வாகத்தின் மையமாக இருந்த கண்டி நகரம் பல பள்ளத்தாக்குகள் மற்றும் மகாவலி நதியால் பாதுகாக்கப்பட்டது. பழங்காலத்தில் மாயா ரட்டையை சேர்ந்த இது பிற்காலத்தில் மலையரட்ட என்று அழைக்கப்பட்டது.
பழங்காலத்தில் கண்டி இராச்சியம் பல பெயர்களில் அறியப்பட்டது.
1. செங்கடகல இராச்சியம் (සෙංකඩගල රාජධානිය)
2. மலைநாட்டு இராச்சியம் (කන්ද උඩරට රාජධානිය)
3. மஹாநுவர இராச்சியம் (මහනුවර රාජධානිය)
4. பஞ்ச மலை நாடு (කන්ද උඩ පස් රට)
இந்த இராச்சியத்தின் தலைநகரம் இன்று கண்டி என்று அழைக்கப்படும் நகரம். இதுவும் கடந்த காலங்களில் பல பெயர்களில் அறியப்பட்டது.
1. செங்கடகலபுர (සෙංකඩගලපුර)
2. செங்கடகல நகரம் (සෙංකඩගල නුවර)
3. கடுப்புலு நகரம் (කටුපුළු නුවර)
4. ஸ்ரீ வர்தனபுரய (ශ්රී වර්ධනපුරය)
5. கந்தே நுவர (කන්දෙ නුවර )
இந்த ராஜ்யத்தையும் அதன் தலைநகரத்தையும் பாதுகாக்கும் பல தனித்துவமான புவியியல் இடங்களும் இருந்தன. கண்டி நகரம் மகாவலி நதியால் பாதுகாப்பு பெற்றது. மகாவலி ஆறு நகரின் மேற்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாய்ந்தது.
கண்டி நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஹப்புத்தளை மலைத்தொடர் (හපුතලේ කඳු වැටිය), டோலஸ்பாகே மலைத்தொடர் (දොළොස්බගෙ කඳුවැටිය), நக்கிள்ஸ் மலைத்தொடர் (නකල්ස් කඳුවැටිය), நமுனுகுல மலைத்தொடர் (නමුණුකුල කඳුවැටිය), லுனுகல மலைத்தொடர் (ලුණුගල කඳුවැටිය), ராகலா மலைத்தொடர் (රාගල කඳු වැටිය), ஹந்தான மலைத்தொடர் (හන්තාන කඳු පන්තිය), உடவத்த மலைத்தொடர் (උඩවත්ත කඳු) போன்ற பல மலைத்தொடர்களால் பாதுகாக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, சப்ரகமுவ மற்றும் ரக்வான (සබරගමු හා රක්වාන කඳු) மலைத்தொடர்களும் ஓரளவு தொலைவில் இருந்தாலும், தெற்கு மற்றும் தென்மேற்கில் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்குகின்றன.
கடினமான பாதைகள் வழியாகவே கண்டிக்குள் நுழைய முடிந்தது.
கினிகத்தேன பள்ளத்தாக்கு (ගිනිගත්හේන දුර්ගය),
கலகெதர பள்ளத்தாக்கு (ගලගෙදර දුර්ගය),
பலகடுவ பள்ளத்தாக்கு (බලකඩුව දුර්ගය),
பலன பள்ளத்தாக்கு (බලන දුර්ගය)
ஹுன்னஸ்கிரி (හුන්නස්ගිරිය)
போன்ற இடங்கள் அரிதாகவே செயற்பட்டன. இதன் காரணமாக, இலங்கையில் உள்ள மற்ற அனைத்து ராஜ்ஜியங்களை விடவும் புவியியல் ரீதியாக பாதுகாப்பு பெற்ற ஒரு இராச்சியமாக கண்டி உள்ளது.
அதன் தட்பவெப்ப நிலை மிதமானது. நிலமும் வளமாக இருந்தது. இதனால் விவசாயத்தில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. எனவே, இந்த இராச்சியம் இலங்கையில் இரண்டாவது மிக நீண்ட காலத்தை கொண்ட இராச்சிமாக இருந்தது. வெளிநாட்டு உறவுகளைப் பராமரிப்பதில் உள்ள சிரமத்தைத் தவிர, இந்த ராஜ்யத்திற்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
Comments
Post a Comment